ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவர் உதயங்க கைது

Spread the love

ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க டுபாய் பொலிஸாரினால் இன்று (4) கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவர் டுபாய் ஊடாக அமெரிக்க செல்ல முற்பட்டப் போதே டுபாய் விமானநிலையத்தில் வைத்து டுபாய் பாதுகாப்பு தரப்பினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக உதயங்கவின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, இவர் ரஷ்யாவுக்கான தூதுவராக கடமையாற்றிய சந்தர்ப்பத்தில் மிக் விமான கொள்வனவு மோடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டு இவர் மீது சுமத்தப்பட்டுள்ள நிலையில், இவரைக் கைது செய்வதற்கு சர்வதேச பொலிஸாரின் உதவியை இலங்கை நாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

(Tm)

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*