செம்மண்ணோடை 208D கிராம சேவகர் பிரிவில் சுதந்திர தின நிகழ்வு

0
209

செம்மண்ணோடை 208D கிராம சேவகர் பிரிவில் இலங்கை சனநாயக சோஷலிசக் குடியரசின் 70வது சுதந்திர தின நிகழ்வு இன்று (04.02.2018) ஞாயற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு வாழைச்சேனை – செம்மண்ணோடை அல் ஹம்ரா வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஐ.எம் முஸம்மில் அவர்களின் தலைமையில் நடை பெற்றது.

இந்நிகழ்வானது தேசிய கீதம் இசைத்த வண்ணம் தேசிய கொடி ஏற்றப்பட்டதுடன் பின்னர் சுதந்திர தினம் தொடர்பாக அதிதிகளாக கலந்து சிறப்பித்த தக்வா பள்ளிவாயல் பேஷ் இமாமும் சிறாஜிய்யா அரபுக் கல்லூரி அதிருமான மெளலவி எம்.எஸ்.எம். அஸ்ரப் (மன்பயி) அவர்களினால் சிறப்புரையும், தாருஸ்ஸலாம் அரபுக் கலாசாலை அதிபர்
எம்.பீ.எம். இஸ்மாயில் (மதனி) அவர்களினால் விஷேட உரையும், புத்த ஜெயந்தி விகாராதிபதி அவர்களினால் சிற்றுரையும் நிகழ்த்தப்பட்டது.

இந் நிகழ்வில் கல்குடா ஜம்மியத்துல் உலமா சபை தலைவர் அல்ஹாஜ். ஏ.எல்.எம். இஸ்மாயில் மெளலவி மற்றும் மாவடிச்சேனை ஜூம்ஆப் பள்ளிவாயல் பேஷ் இமாம் மெளலவி எம்.யூ.எம். ஜிப்ரி, கிராம அபிவிருத்தி சங்கம், பெண்கள் கிராம அபிவிருத்தி சங்கம், தக்வா ஜூம்ஆ பள்ளிவாயல் நிருவாகிகள், ரோஸ் பாலர் பாடசாலை, அல் மினா பாலர் பாடசாலை, அல் இல்மா பாலர் பாடசலை ஆகியவற்றின் ஆசிரியைகள், சாட்டோ இளைஞர் கழகம், மாற்றுத் திறனாளிகள் சங்கத்தின் பிரதிநிதிகளும், பொது மக்களும் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here