தேரரின் உயிரிழப்புக்கு யானை காரணமல்ல!

0
175

பெல்லங்கவில ரஜமகாவிகாரையின் விகாராதிபதியும், ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைகழகத்தின் உப பீடாதிபதி பேராசிரியர் பெல்லங்வில விமலரத்ன தேரர் மாரமைப்பு ஏற்பட்டதாலேயே உயிரிழந்திருப்பதாக களுபோவிலை போதனா வைத்தியசாலையின் நீதிமன்ற வைத்திய அதிகாரி பீ.பீ. தசநாயக்க தெரிவித்துள்ளார்.

தேரரின் முதுகில் காயம் ஒன்று ஏற்பட்டிருந்ததாகவும், இதனால் அவருக்கு சத்திரசிகிச்சையொன்று மேற்கொள்ளப்பட்டதாகவும், இதனைத் தொடர்ந்து இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளமைக் குறித்து பிரேத பரிசோதனையின் போதே தெளிவாகியுள்ளதாக வைத்தியர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2ஆம் திகதி காலை விபத்தொன்றில் சிக்கிய தேரர் களுபோவில போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டதாகவும், அங்கு சத்திரிசிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டதன் பின்னர் அவர் தனியார் வைத்தியசாலை ஒன்றுக்கு மாற்றப்பட்டதாகவும், குறித்த தனியார் வைத்தியசாலையில் வைத்தே தேரர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விகாரையில் இருந்த தேரரை காட்டுயானை தாக்கியதால்தான் உயிர் இழந்தார் என்று செய்திகள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here