கல்முனை பிரதேச செயலக சுதந்திர தின நிகழ்வு

0
316

(அகமட் எஸ். முகைடீன்)

இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் 70வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கல்முனை பிரதேச செயலகத்தில் இன்று (4) ஞாயிற்றுக்கிழமை காலை பிரதேச செயலாளர் எம்.எச்.எம். கனி தலைமையில் சுதந்திர தின நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி அல்ஹாஜ் எச்.எம்.எம். ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்துகொண்டு தேசியக் கொடியை ஏற்றிவைத்தார்.

மேலும் இந்நிகழ்வில் கல்முனை பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் கே. இராஜதுரை, சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் ஏ.ஆர். சாலிஹ், மருதமுனை நற்பிட்டிமுனை சமுர்த்தி வங்கி முகாமையாளர் சட்டத்தரணி என்.எம் முபீன், பிதம முகாமைத்துவ உதவியாளர் எம். ஜவ்பர், கல்முனை பொதுச் சந்தை வர்த்தக சங்கத் தலைவர் அல்ஹாஜ் யு.எல். ஜமால்தீன், வர்த்தக சங்க உறுப்பினர்களான அல்ஹாஜ் ஏ.எல். கபூல் ஆசாத், எம். ரசாக், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here