வாழைச்சேனை ஐக்கிய ஆட்டோ சாரதிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் சுதந்திர தின நிகழ்வு

Spread the love

வாழைச்சேனை இக்பால் சனசமூக நிலையத்தின் பங்களிப்புடன் கல்குடா தொகுதி ஐக்கிய ஆட்டோ சாரதிகள் சங்கத்தின் தலைவர் எஸ்.எச்.நளீம்தீன் அவர்களின் தலைமையில் 2018.02.04ம் திகதி காலை 10.00 மணிக்கு வாழைச்சேனை சந்தை ஆட்டோ தரிப்பிடத்தில் சுதந்திர தின நிகழ்வுகள் நடை பெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்சஜய பெறமுன அவர்களும் கௌரவ அதிதிகளாக வாழைச்சேனை முகைதீன் ஜும்ஆ பள்ளி வாயல் செயலாளர் பி.எம்.இஸ்மாயில், வாழைச்சேனை இக்பால் சனசமூக நிலையத்தின் தலைவரும் வாழைச்சேனை முகைதீன் ஜும்ஆ பள்ளி வாயல் உப செயலாளருமான எ.எல்.எம்.லியாப்தீன், இணைப்பாளர் ஏ.எல்.எம். பாரூக், கல்குடா தொகுதி ஐக்கிய ஆட்டோ சாரதிகள் சங்கத்தின் முன்னால் தலைவர் எஸ்.எம்.சபீர் , கல்குடா சூரா சபையின் தலைவர்  மௌலவி எ.ஜி.ஹாமித் சதகா , அகில இலங்கை வை.எம்.எம்.எ.பேரவையின் மட்டக்களப்பு மாவட்டப் பணிப்பாளர் ஜனாப் எ.பி.எம்.இர்பான்  வாழைச்சேனை புத்த விகாராதிபதி தம்பா லங்கா தேரர் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வின் போது வரிய மாணவர்களுக்கான பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் ஆட்டோக்களின் ஊர்வலமும் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*