குளிர்சாதனப்பெட்டிக்குள் உயிருடனிருந்த ஆர்மடில்லா எனப்படும் எறும்புண்ணி மீட்பு!

Spread the love

கொள்ளுப்பிட்டி-வாலுகாராம வீதியில் உள்ள விடுதி ஒன்றின் குளிர்சாதனப்பெட்டியிலிருந்து உயிருடன் ஆர்மடில்லா எனப்படும் எறும்புண்ணி ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

குறித்த எறும்புண்ணியை குளிர்சாதனப்பெட்டியில் வைத்திருந்த சீனாவைச் சேர்ந்த தலைமை சமையற்காரர் ஒருவரையும் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

பொலிஸ் அவசர அலைபேசி இலக்கமான 119 என்ற அழைப்பிற்கு கிடைத்த தகவலுக்கமைய, குறித்த ஆர்மடில்லாவைக் கைப்பற்றியதாகவும், இது 4 அடி நீளமும், 6 கிலோகிராம் நிறையையும் கொண்டது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர் கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

tm

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*