யாழில் பெரும்போக மரக்கறிச் செய்கையில் விவசாயிகள் ஆர்வம்

Spread the love

(பாறுக் ஷிஹான்)

யாழ் குடாநாட்டின் பல பகுதிகளிலும் பெரும்போக மரக்கறிச் செய்கையில் விவசாயிகள் பெரிதும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

யாழ். வலிகாமம் தெற்கு, வலிகாமம் வடக்கு, வலிகாமம் கிழக்கு ஆகிய பிரதேசங்களில் பெரும்போக மரக்கறிப் பயிர்ச் செய்கை பல ஏக்கர் நிலப் பரப்பில் பயிரிடப்பட்டுளளது.

குறிப்பாக வலிகாமத்தில் குப்பிளான், ஏழாலை, புன்னாலைக்கட்டுவன், ஈவினை, குரும்பசிட்டி, வயாவிளான், கட்டுவன், தெல்லிப்பழை, அளவெட்டி, மல்லாகம், சுன்னாகம், ஊரெழு, உரும்பிராய், அச்செழு, இணுவில், கோண்டாவில், நீர்வேலி, இருபாலை, சிறுப்பிட்டி, கோப்பாய், புத்தூர் ஆகிய பகுதிகளில் பச்சைமிளகாய், வெங்காயம், கரட், பீற்ரூட், உருளைக்கிழங்கு, தக்காளி, கோவா போன்ற பல வகையான பயிர்கள் நூற்றுக் கணக்கான ஏக்கர் நிலப் பகுதிகளில் பயிர் செய்யப்பட்டுள்ளது.

இம்முறை பெரும்போக வெங்காயச் செய்கை காலநிலை காரணமாக ஒருவித நோய்த் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ள காரணத்தால் தாம் பாதிக்கப்பட்டுள்ளதாக வலிகாமம் பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இதனால் தாம் பொருளாதார ரீதியான இழப்பை எதிர்கொண்டுள்ளதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும், யாழ். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் 35 ஏக்கர் நிலப் பரப்பில் உருளைக்கிழங்குச் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*