சாய்ந்தமருதில் வன்முறையை தூண்டும் வகையில் ஹக்கீம் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்!

0
172

( ஹபீல் எம்.சுஹைர் )

சாய்ந்தமருது நகரானது ஒரு கலவர பூமியாக மாற்றம் பெற்றுள்ளது. இதன் போது பல சந்தர்ப்பங்களில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களின் கைதுக்கு பல வகையிலும் அமைச்சர் ஹக்கீமே காரணமானவர். அமைச்சர் ஹக்கீமுக்கு, சாய்ந்தமருது மக்களே தனித் தலைமைத்துவம் வழங்கி கெளரவித்தவர்கள். அவர்கள் அமைச்சர் ஹக்கீமிடம், அவர்களின் தேவையான பிரதேச சபை கோரிக்கையை முன் வைத்தார்கள். அவரும் பல வருடமாக தருகிறோம்.. தருகிறோம்.. என ஏமாற்றியே வந்தார்.

அந்த மக்கள் விரக்தியின் உச்சத்துக்கு சென்று, தற்போது அமைச்சர் ஹக்கீமுக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். இதனை புரிந்து கொண்டு அமைச்சர் ஹக்கீம் மிகவும் நிதானமான வகையில் தனது செயற்பாடுகளை அமைத்திருக்க வேண்டும். அவரும் அந்த மக்களின் உணர்வுகளை புரிந்துகொள்ளாது, ஏட்டிக்குப் போட்டியான அரசியலை செய்து கொண்டிருக்கின்றார். தற்போது இந்த போராட்டத்தை தலைமை தாங்கிக்கொண்டிருக்கும் ஹனீபா, இப் போராடத்துக்கு முன்பு மு.காவின் தீவிர ஆதரவாளர் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

இவ்விடயத்தை அமைச்சர் றிஷாத் கையாண்டது போன்று அமைச்சர் ஹக்கீமும் மிக நிதானமாக கையாண்டிருக்கலாம். அவ்வாறு கையாண்டிருந்தால், இந்தளவு பிரச்சினை முற்றியிருக்காது. அவர்களும் வன்முறை நோக்கிய திசையின் பக்கம் சென்றிருக்க மாட்டார்கள். இந்த வகையில் சிந்திக்கும் போது, தற்போது சாய்ந்தமருதில் நடந்துகொண்டிருக்கும் வன்முறைகளுக்கு அமைச்சர் ஹக்கீமின் அணுகு முறையே பிரதான காரணமாகும். இவரின் குறித்த செயல் மூலம் அந்த மக்களின் வாக்கு ஒரு போதும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, இன்னும் தன் மீதான பழியை அதிகரித்துக்கொண்டுள்ளார். அந்த வகையில் அமைச்சர் றிஷாத் வயதில் சிறியவராக இருந்தாலும், அரசியல் அனுபவத்திலும் மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்வதிலும் அமைச்சர் ஹக்கீமை விட அனுபவமிக்கவர்.

அமைச்சர் ஹக்கீம் கடந்த சனிக்கிழமை சாய்ந்தமருதில் வைத்து ஒரு சண்டியன் போல (அவரது பாதுகாப்புக்கு எந்த பிரச்சினையுமில்லை..!), எதிரிகளை சண்டைக்கும் அழைக்கும் விதமாக பேசியிருந்தார். இதனை வீடியோ ஆதாரங்கள் மூலம் தெளிவாக நிரூபிக்க முடியும். அவரது குறித்த அந்த பேச்சுக்கள் எதிராளிகளையும் தனது கட்சிக்காரர்களையும் வன்முறையின் பக்கம் தூண்டியிருக்கும். வன்முறை செய்வது மாத்திரம் குற்றமல்ல. வன்முறைக்கு தூண்டுவதும் குற்றமே. அந்த வகையில் அமைச்சர் ஹக்கீம் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இதனை சாய்ந்தமருதை சேர்ந்தவர்கள் அமைச்சர் ஹக்கீமுக்கு எதிராக நீதி மன்றம் செல்வதன் மூலம் செய்துகொள்ள முடியும். இன்று சாய்ந்தமருதில் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் அசாதாரண நிலைக்கு அமைச்சர் ஹக்கீமே பொறுப்புச் சொல்லியாக வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here