பிரதமரிடம் கல்குடாவுக்கு தேவையான வேலை திட்டங்களை முன்வைத்த போது நிறைவேற்றித் தருவோம் என்று கூறியது எமது பிரதேசத்திற்கு கிடைத்த ஒரு மாற்றம்!

Spread the love

(எஸ்.எம்.எம்.முர்ஷித்)    

கல்குடாப் பகுதியில் காணப்படும் பிரச்சனைகளை பிரதமர் எதிர்காலத்தில் தீர்த்து தருவேன் என்றது தேசியத்திலே எங்களது பிரச்சனை ஏற்புடமையாக்கப்பட்ட பிரச்சனை என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும் என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

ஓட்டமாவடி பிரதேச சபைக்கு ஐக்கிய தேசிய முன்னனியில்; போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து வேட்பாளர் எச்.எம்.அமீர் தலைமையில் ஓட்டமாவடியில் நேற்று இரவு இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்-

கல்குடா பிரதேசத்திற்கு பிரதமரை அழைத்து வந்து இங்கு செய்யப்பட வேண்டிய விடயங்களை பிரதமருக்கு ஞாபகப்படுத்தி பிரதமரினால் தேவைகளை நிறைவேற்றுவோம் என்று சொல்ல வைத்துள்ளோம் என்றால் அரசியலில் எங்களுக்கு கிடைத்த பாரிய வெற்றியாகும்.

என்னால் பிரதமரிடத்தில் கல்குடாப் பிரதேசத்திற்கு தேவையான வேலை திட்டங்களை முன்வைத்த போது அதனை எதிர்காலத்தில் நிறைவேற்றித் தருவோம் என்று கூறியது எமது பிரதேசத்திற்கு கிடைத்த ஒரு மாற்றம் என்பதை யாரும் மறக்க முடியாது.

கல்குடாப் பகுதியில் காணப்படும் பிரச்சனைகளை பிரதமர் எதிர்காலத்தில் தீர்த்து தருவேன் என்றது தேசியத்திலே எங்களது பிரச்சனை ஏற்புடமையாக்கப்பட்ட பிரச்சனை என்பதை நீங்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.

இந்தப் பிரச்சனைகளை முன்னாள் ஜனாதிபதி மகிந்த, தற்போதைய ஜனாதிபதி மைத்திரி, பிரதமர் ரணில், அமைச்சரவைக்கு இவற்றை தெளிவுபடுத்தி இருக்கின்றோம். இவையெல்லாம் நாங்கள் செய்கின்றோம் என்றால் நீங்கள் எங்களுக்கு அளித்த வாக்குப் பலத்தின் மூலம் தான். இதனால் தான் நாங்கள் உங்கள் பிரச்சனைகளை தோலில் சுமந்து கொண்டிருக்கின்றோம். என்றார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*