சிறுபான்மையினருக்கு நன்மை அளிக்க கூடிய கட்சி ஐ.தே.கட்சி அமைப்பாளர் எம்.எஸ். அப்துல் றஸ்ஸாக்

Spread the love

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

இந்த நாட்டின் அனைத்து இனத்தவர்களுக்கும் சமநிலையாக பகிர்ந்தளிக்க கூடிய ஒரே ஒரு தலைவர் ரணில்விக்ரமசிங்க என்பதை நாங்கள் எல்லோரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என ஐ.தே. கட்சியின் கல்முனை தொகுதிஅமைப்பாளரும் சட்டத்தரணியுமான அப்துல் றஸ்ஸாக் கூறினார்.

நற்பிட்டிமுனை 9 ஆம் வட்டாரத்தில் போட்டியிடும் வேட்பாளர் நடராசா நந்தினியை ஆதரித்து நடைபெற்ற கூட்டத்தில்பேசுகையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நீண்ட காலமாக எதிர்க்கட்சியில் இருந்து வந்த எமது கட்சி, இப்போது ஆட்சி பீடம் ஏறியிருக்கிறது. நாங்கள் எதிர்க்கட்சியில்இருந்து வந்த காலங்களில் எதுவிதமான அபிவிருத்தியும் காணப்படவில்லை. எமது நாட்டில் குறிப்பாக எமது பிரதேசங்களில்அபிவிருத்தியிலும் தொழில் வாய்ப்பினிலும் மிகவும் பின்தங்கிய நிலையில் தான் உள்ளது. இப்போது எமது நல்லாட்சி அரசுஇந்த நாட்டை கைப்பற்றி பல வேலைத் திட்டங்களை உருவாக்கி வருகிறது. எமது பிரதேசத்திலும் பாரிய அபிவிருத்திதிட்டங்களை கல்முனை மாநகர சபை ஊடாக செயல்படுத்த உள்ளது.

இந்த அரசு 25 சதவீதமான பெண்களை இந்த தேர்தலில்களம் இறக்கி இருக்கின்றது. பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து இருக்கிறது. எதிர்வருகின்ற தேர்தலில் நாங்கள்அனைவரும் ஐ.தே.கட்சிக்கு வாக்களித்து கல்முனை மாநகர சபைக்கு எமது வேட்பாளரான 9ஆம் வட்டார நடராசா நந்தினியைவெற்றி பெற செய்து, இங்கு நீண்ட காலமாக எதிர்பார்ப்போடு இருந்து வரும் அபிவிருத்தி, தொழில் வாய்ப்பு, சுயதொழில்வேலை வாய்ப்பு அனைத்தையும் முன்னெடுத்து செல்ல யானை சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இக் கூட்டத்தில் நற்பிட்டிமுனை, சேனை குடியிருப்பு வேட்பாளர்கள் மற்றும் ஐ.தே. கட்சியின் கல்முனை தொகுதி பிரசாரசெயளாலரும் நியமன பட்டியல் வேட்பாளருமான அஸ்வான் சக்காப் மௌலானாவும் நிகழ்வில் கலந்து கொண்டுஉரையாற்றினார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*