ஓட்டமாவடி பிரதேச சபையின் ஏற்பாட்டில் சுதந்திர தின விழாவும் மென் பந்து கிரிக்கட் சுற்றுத் தொடரும்

Spread the love

ஓட்டமாவடி பிரதேச சபையின் ஏற்பாட்டில் இலங்கை சனநாயக சோஷலிசக் குடியரின் 70ஆவது சுதந்திர தின விழா ஆரம்ப நிகழ்வும் அரச திணைக்களுக்கிடையிலான மென் பந்து கிரிக்கட் சுற்றுத் தொடரும் நேற்று 04ம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஓட்டமாவடி அமீர் அலி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

ஓட்டமாவடி பிரதேச சபையின் விஷேட ஆணையாளரும் செயலாளருமாகிய எம்.எச்.எம். ஹமீம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர் திரு. கா. சித்திரவேல் கலந்து கொண்டு தேசியக் கொடியினை ஏற்றி வைத்தார்.

அரச திணைக்களங்களைச் சார்ந்த 10 அணிகள் கலந்து கொண்ட கிரிக்கெட் சுற்றுத் தொடரில் பிறைந்துரைச்சேனை சாதுலியா வித்தியாலயம் மற்றும் கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபை ஆகியன இறுதிப் போட்டிக்குத் தெரிவாகி வெற்றிக் கிண்ணத்தை கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபை தனதாக்கிக் கொண்டது.

இத்தொடரின் தொடர் ஆட்ட நாயகன் விருதினை சாதுலியா வித்தியாலய அணியைச் சேர்ந்த சபீக் ஆசிரியரும் இறுதிப் போட்டியின் ஆட்ட நாயகன் விருதினை கோறளைப்பற்று பிரதே சபை பணியாளர் அபுபக்கர் என்பவரும் தட்டிச் சென்றனர்.

சுதந்திர தின சுற்றுத் தொடரானது (INDEPENDENT TROPHY) எதிர்வரும் காலங்களில் ஓட்டமாவடி பிரதேச சபைக்கு தெரிவாகவுள்ள மக்கள் பிரதிநிதிகளுடன் இணைந்து மேலும் சிறப்பாக நடாத்துவதற்கு ஒழுங்குகள் செய்யப்படும் என இந்நிகழ்வினை சிறப்பாக வடிவமைத்து நடாத்துவதற்கு ஆலோசனையும் ஊக்கமும் வழங்கிய பிரதேச சபையின் செயலாளர் தெரிவித்திருந்ததுடன், மேலும், இந்நிகழ்வுகள் வெற்றிகரமாக நடைபெற அனைத்து வழிகளிலும் உதவி பெரும் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள், ஊழியர்களுக்கு தனது நன்றிகளை தெரிவித்தார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*