வேட்பாளர்களின் வீடுகளிலும் பதாதைகளை காட்சிப்படுத்த தடை

0
712

இன்று (7) நள்ளிரவுடன் தேர்தல் பிரசாரங்கள் நிறைவுக்கு வந்துள்ளதுடன், இதுத்தொடர்பான விசேட வர்த்தமானி ஒன்று தேர்தல்கள் ஆணைக்குழுவால் வெளியிடப்பட்டுள்ளது.

அத்துடன், வீடு வீடாகச் சென்று பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு வழங்கப்பட்டிருந்த அதிகாரம் இன்று (7) இரவு 9 மணியுடன் நிறைவுக்கு வந்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர குறிப்பிட்டார்.

கொழும்பு கோட்டையில் அமைந்துள்ள பொலிஸ் தலைமையகத்தில் இன்று (7) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here