ஓட்டமாவடி மத்ரஸதுல் நஹ்ர் அல் வாதியில் அல் குர்ஆன் பகுதி நேர மனனப்பிரிவுக்கு விண்ணப்பம் கோரல்!

Spread the love

ஓட்டமாவடி பிரதேசத்தில் இருபாலாருக்குமான அல் குர்ஆன் பகுதி நேர மனனப்பிரிவு ஒன்றின் அவசியம் குறித்து நீண்ட காலமாக பலராலும் சுட்டிக் காட்டப்பட்டது.
இத் தேவையின் முக்கியத்துவத்தை உணர்ந்து பெப்ரவரி 2018ல் இருபாலாருக்குமான பகுதி நேர மனனப்பிரிவு ஒன்றினை ஓட்டமாவடி மீராவோடை வீதியில் அமைந்துள்ள மஸ்ஜிதுல் நஹ்ர் பள்ளிவாயலில் ஆரம்பிக்க இப்பிரதேச புத்தி ஜீவிகள் முடிவு செய்துள்ளனர் என்பதை மகிழ்ச்சியுடன் அறியத் தருகின்றோம் அல்ஹம்துலில்லாஹ்.
பாடசாலையில் கல்வி கற்கும் 12 வயதிற்கு மேற்படாத மாணவ மாணவிகள் இப்பிரிவில் இணைந்து கொள்ள விண்ணப்பிக்க முடியும்.
மேற்படி இப்பிரிவில். 

• 04 வருடங்கள் பூர்த்தியாவதற்குள் அல் குர்ஆன் மனனம்.
• முழுமையாக தஜ்வீத் சட்டங்கள் கற்பிக்கப்படும்.
• நாளாந்தம் ஓதக் கூடிய துஆக்கள்
• மாணவ மாணவிகளின் தேவையைக் கருதி சிங்களம் ஆங்கிலம் கணிதம் போன்ற வகுப்புக்கள் நடாத்தப்படும்.

நேரம் : காலை 05.30 மணியிலிருந்து 06.30 மணி வரை
மாலை 06.30 மணியிலிருந்து 08.30 மணி வரை

நேர்முகப் பரீட்சை
11.02.2018 ஞாயிறு மு.ப 10.00 – 12.00 மணி வரை

விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளும் இடங்கள்
1.சமீன் அரிசிக்கடை ஓட்டமாவடி (சற்றா பாமசிக்கு முன்பாக) 0776161758
2.பெஸன் மார்ட் ஓட்டமாவடி 0772802905
3.பள்ளி முஅத்தினார் ஆற்றங்கரை பள்ளி மஸ்ஜிதுல் நஹ்ர் ஓட்டமாவடி 0774400350

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*