தனியார் கல்வி நிறுவனங்களிடம் தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ள கோரிக்கை

0
295

தனியார் கல்வி நிறுவனங்களில் கல்வி பயிலும் மாணவர்கள் வாக்களிப்பதற்கு வசதியாக தேர்தல் தினத்தன்று விரிவுரைகள் மற்றும் பரீட்சைகள் என்பவற்றை திட்டமிட்டுக் கொள்ளுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு கேட்டுக் கொண்டுள்ளது.

தனியார் கல்வி நிறுவனங்களில் கல்வி பயிலும் மாணவர்கள் தேர்தல் தினத்தில் நடைபெறுகின்ற விரிவுரைகள் மற்றும் பரீட்சைகள் காரணமாக வாக்களிக்கும் சந்தர்ப்பத்தை இழப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளதென்று தேர்தல்கள் ஆணைக்குழு கூறியுள்ளது.

இந்த நிலமைகளை கருத்திற் கொண்டு தேர்தல் தினத்தன்று நடத்தப்படுகின்ற விரிவுரைகள் மற்றும் பரீட்சைகள் தொடர்பில் அதிக அவதானம் செலுத்த நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு தனியார் கல்வி நிறுவனங்களின் உரிமையாளர்கள் மற்றும் பகுதி நேர வகுப்பு ஆசிரியர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது.

ad

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here