தேர்தல் கடமைகளுக்கு வராத அதிகாரிகளுக்கு சிறைத்தண்டனை!

0
339

தேர்தல் கடமைகளிலிருந்து விலகியிருக்கும் அரச அதிகாரிகளுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்க தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அதிகாரம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல்கள் சட்டத்தின் கீழ் 3 வருடங்கள் சிறைத்தண்டனையும், ஒரு இலட்ச ரூபாய் வரையான அபராதப் பணமும் விதிப்பதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அரசியலமைப்பினால் கிடைத்துள்ள அதிகாரத்திற்கு அமைய நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என தேர்தல்கள் திணைக்களத்தின் மேலதிக ஆணையாளர் எம்.எம். மொஹமட் தெரிவித்துள்ளார்.

எனவே, அரச அதிகாரிகள் தேர்தல் கடமைகளில் ஈடுபடுவது அவசியம் எனவும், அவ்வாறு தேர்தல் கடமைகளில் ஈடுபடாத அரச அதிகாரிகளுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தேர்தல் கடமைகள் மற்றும் வாக்கு எண்ணும் நிலையங்களுக்கு 1,75000 அதிகாரிகளை ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளதாகவும், கொழும்பிலுள்ள அதிகாரிகளின் ஒரு தொகுதியினர் நேற்றைய தினம் நாட்டின் சகல மாவட்டங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here