விருப்பமான கட்சி அல்லது சின்னம் அல்லது குழுவின் பெயருக்கு மாத்திரம் புள்ளடி (X) இடவும் தேர்தல் ஆணைக்குழு

0
157

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

நடைபெறவிருக்கும் உள்ளூராட்சிமன்ற தேர்தலில் வாக்காளர்களுக்கு விநியோகிக்கப்படுகின்ற வாக்குச்சீட்டில் போட்டியிடுகின்ற கட்சிகளின் பெயர்களும் சின்னங்களும் சுயேட்சைக்குழுக்கள் போட்டியிடுவதாயின் சுயேட்சைக் குழுவென்ற சொற்றொடரோடு அடையாளம் காட்டும் இலக்கங்கள் மற்றும் சின்னங்கள் மாத்திரமே அச்சிடப்பட்டிருக்கும் வேட்பாளரின் அல்லது வட்டாரங்களின் பெயர்கள் அல்லது இலக்கங்கள் அதில் குறிப்பிடப்பட்டிருக்கமாட்டாது.

எனவே வாக்கினை நீங்கள் அளிக்கின்ற போது, உங்களுக்கு விருப்பமான கட்சியின் பெயர், சின்னம் அல்லது குழுவின் பெயர் மற்றும் சின்னம் உள்ள நிரலில் சின்னத்துக்கு வலப்புறமாகவுள்ள கூட்டில் ஒரேயொரு புள்ளடியை (X) மாத்திரம் இட்டு அடையாளமிடும்படி வாக்காளர்களை தேர்தல் ஆணைக்குழு கேட்டுள்ளது.
வாக்குச் சீட்டில் வேறெந்த சின்னத்தை இடுவதையோ அல்லது வரைவதையோ அல்லது எழுதுவதையோ கட்டாயமாக தவிர்த்துக் கொள்ளுதல் வேண்டும். ஏனெனில் பல்வேறு அடையாளங்களை வரைதல், அடையாளமிடல், வாக்காளரை அடையாளம் காணச் செய்வதற்கான ஒரு முயற்சியாகக் கொள்ளப்பட முடியுமென்பதாகும்.

ஆதலால் உங்களுக்கு விருப்பமான கட்சியின் அல்லது குழுவின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள நிரலிலுள்ள அக்கட்சியின் அல்லது குழுவின் சின்னத்திற்கு வலப்புறமாக உள்ள வெற்றுக் கூட்டில் ஒரேயொரு புள்ளடியை (X) மாத்திரம் இட்டு உங்கள் வாக்குளை அளிக்குமாறு தேர்தல் ஆணைக்குழு வினயமாகக் கேட்டுக் கொண்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here