முப்பது வருடக்  கல்விப் பணியிலிருந்து ஒய்வு பெரும் சுபைர் ஆசிரியருக்கு சேவை நலன் பாராட்டு விழா

0
251

(ஓட்டமாவடி எச்.எம்.எம்.பர்ஸான்)

முப்பது வருடங்கள் கல்விப் பணியில் தன்னை அர்ப்பணித்து ஒய்வு பெற்றுச் செல்லும் வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலையின் ஆசிரியர் அல்ஹாஜ் எம்.ஐ.எம். சுபைர் அவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு பாடசாலையின் அதிபர் ஏ.எம்.எம். தாஹிர் அவர்களின் தலைமையில் மிகச் சிறப்பான முறையில் நடைபெற்றது.

ஒய்வு பெற்றுச் செல்லும் சுபைர் ஆசிரியர் 1988 ம் ஆண்டு தனது முதல் நியமனத்தினைப் பெற்று பிறைந்துரைச்சேனை அஸ்ஹர் வித்தியாலயத்தில் தனது ஆசிரியர் கடமையினை மேற்கொண்டார். சிறந்த ஆளுமைமிக்க சுபைர் ஆசிரியர் தனக்கு வழங்கப்படும் பணிகளை கச்சிதமாக நிறைவேற்றுவதோடு கற்பித்தல் நடவடிக்கைகளை ஆர்வமுடன் செயற்பட்டு மாணவர்களின் மனங்களில் இடம்பிடித்தவருமாவார்.

வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலையில் சுமார் பதினேழு வருடங்கள் கடமை புரிந்து பாடாசாலையின் முன்னேற்றத்திற்கு பல்வேறுபட்ட பங்களிப்புக்களை சுபைர் ஆசிரியர் புரிந்துள்ளார்.

இவ் சேவை நலன் பாராட்டு நிகழ்வில் கல்வி அதிகாரிகள், பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், நலன்விரும்பிகள் எனப்பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here