வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்றது வாக்குப் பெட்டிகள்!

Spread the love

(பாறுக் ஷிஹான்)

உள்ளுராட்சி தேர்தலுக்கான யாழில் அமைக்கப்பட்ட வாக்களிப்பு நிலையங்களுக்கான வாக்குப் பெட்டிகள் அனுப்பிவைக்கும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வாக்குப் பொட்டிகள் விநியோகிக்கின்ற அல்லது பெற்றுக் கொள்ளுகின்ற நிலையமாக யாழ்.மத்திய கல்லூரி தெரிவு செய்யப்பட்டுள்ளது.

இன்று (9)காலையில் இருந்தே ஒவ்வொரு வாக்களிப்பு நிலையங்களுக்குமான, வாக்குப் பொட்டிகள் எடுத்துச் செல்லப்படவுள்ளன.

இப் போக்குவரத்து நடவடிக்கைகளுக்காக இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்துகளும், சிற்றூர்திகளும் பயன்படுத்தப்படவுள்ளன.

ஒவ்வொரு வாக்களிப்பு நிலையங்களுக்கும் வழங்கப்படும் வாக்குப் பொட்டிகளுடன் 2 பொலிஸார் பாதுகாப்பிற்காக அனுப்பிவைக்கப்படுவார்கள். இதை விட வாக்களிப்பு நிலையங்களுக்கு வெளியிலும் பொலிஸார் நிறுத்தி வைக்கப்பட்டு பாதுகாப்பு வழங்கப்படும்.

மேலும் வாக்கென்னும் நிலையங்களான செயற்படும் வாக்களிப்பு விலையங்களுக்கு அதிகளவான பொலிஸார் நிறுத்தி வைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்படும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*