மட்டக்களப்பு, மூதூரிலேயே மிகவும் நீளமான வாக்குச் சீட்டுகள், பாணந்துறையில் மிகச் சிறியது!

0
198

நாடளாவிய ரீதியில் நாளை 10ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெறப்போகின்ற நாட்டிலுள்ள 276 பிரதேச சபைகள், 24 மாநகர சபைகள், 41 நகர சபைகள் உள்ளிட்ட 341 உள்ளூராட்சிமன்றங்களுக்கான தேர்தலில், மட்டக்களப்பு மற்றும் மூதூர் ஆகிய இரு இடங்களிலேயே, மிகவும் நீளமான வாக்குச் சீட்டு அச்சிடப்பட்டுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.

அதேவேளை, மிகச் சிறியதான வாக்குச் சீட்டு, பாணந்துறை நகர சபைக்காக போட்டியிடும் கட்சிகள் மற்றும் 3 சுயேச்சைக் குழுக்களை உள்ளடக்கிய வாக்குச் சீட்டு அச்சடிக்கப்பட்டுள்ளது.

அதி நீளமானது என்ற அடிப்படையில், மட்டக்களப்பில் மட்டக்களப்பு மாநகர சபைக்காக 11 அரசியல் கட்சிகள் 5 சுயேச்சைக் குழுக்கள் உள்ளிட்ட 16 போட்டித் தரப்புக்களை உள்ளடக்கிய வாக்குச் சீட்டும், அதேபோல மூதூரில் 14 அரசியல் கட்சிகள் மற்றும் 2 சுயேச்சைக் குழுக்களுடன் 16 போட்டித் தரப்பாரை உள்ளடக்கிய நீளமான வாக்குச் சீட்டும் அச்சடிக்கப்பட்டுள்ளதாக, தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு மாநகர சபைக்கு 33 உறுப்பினர்களும் மூதூர் பிரதேச சபைக்கு 21 உறுப்பினர்களும் தெரிவாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here