(வீடியோ) சவால்களுக்கு மத்தியில் அமீர் அலியின் தன்மானத்தை காப்பாற்றி ஐ.ரி.அஸ்மி

0
394

(ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்)

பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலியின் அரசியல் கோட்டையாக கருதப்படும் ஓட்டமாவடியில் இடம் பெற்ற பிரதேச சபை தேர்தலில் முக்கிய வட்டராரமாக கருத்தப்பட்ட இரண்டாம் வட்டரத்தில் அமீர் அலியின் வலது கையாக கருத்தப்படும் ஐ.ரி.அஸ்மி பல சவால்களுக்கு மத்தியில் வெற்றியடைந்துள்ளமையானது ஓட்டமாவடி பிரதேசத்தில் அமீர் அலியின் அரசியல் தன்மானத்தினை பாதுகாத்துள்ள விடயமாக எல்லோராலும் பேசப்படுகின்றது.

மேலும் ஓட்டமாவடி பிரதேச சபையின் அரசியல் வரலாற்றினை எடுத்துக்கொண்டால் பெரும் தலைவர் மர்ஹும் எம்.எச்.எம் அஸ்ரஃபினுடைய காலம் தொடக்கம் இன்று வரைக்கும் முஸ்லிம் காங்கிரசினால் ஓட்டமாவடி பிரதேச சபையினை கைப்பற்ற முடியாமலே இருந்து வந்துள்ளது. அந்த வகையில் நேற்று 10.02.2018 இடம் பெற்ற தேர்தலில் யானை சின்னத்தில் போட்டியிட்ட பிரதி அமைச்சர் அமீர் அலியின் குழுவானது ஐந்து ஆசனங்களையும் சுயேற்ச்சையாக போட்டியிட்ட முஸ்லிம் காங்கிரஸ் ஐந்து ஆசனங்களையும் சரிக்கு சமனாக கைப்பற்றியுள்ளது.

இந்த நிலைமையினை அவதானிக்கின்ற பொழுது பெரும்பாலும் முஸ்லிம் காங்கிரஸ் ஓட்டாமாவடி பிரதேச சபையின் அதிகாரத்தினை கூட்டாட்சி எனும் முறையிலோ அல்லது தனித்தோ ஆட்சி அமைக்க வாய்ப்பிருப்பதாகவே பார்க்கப்படுகின்றது. முக்கியமாக ஓட்டமாவடி முதலாம் வட்டாரம், முதலாம் வட்டார பி/2, மீராவோடையில் உள்ள கிழக்கு, மேற்கு வட்டரங்கள், தியாவட்டவான் போன்ற ஐந்து வட்டாரங்களிலும் முஸ்லிம் காங்கிரஸ் அமோக வெற்றியடைந்துள்ளது. இந்த நிலைமையானது பிரதி அமைச்சர் அமீர் அலியினுடைய அரசியல் வரலாற்றில் ஓட்டமாவடியில் அவருக்கு ஏற்பட்டுள்ள பாரிய பின்னடைவாகவே இருக்கின்றது.

அதனடிப்படையில் பார்க்கின்ற பொழுது முக்கிய வட்டாரமாக பார்க்கப்பட்ட ஒட்டமாவடி இரண்டாம் வட்டாரத்தில் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஐ.ரி.அஸ்மியின் வெற்றியானது பிரதி அமைச்சர் அமீர் அலியின் தன்மானத்தினை காப்பாற்றிய விடயமாகவும், இரண்டாம் வட்டாரம் தனது அரசியல் கோட்டை என்பதனை மீண்டும் கல்குடா சமூகத்திற்கு பறை சாற்றக்கூடிய விடயமாகவும் பார்க்கப்படுகின்றது.

அதே போன்று பிரதி அமைச்சர் அமீர் அலியின் குழுவில் போட்டியிட்ட முக்கிய வேட்பாளர்களான முன்னாள் ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் கேபி.எஸ்.ஹமீட், முன்னாள் நீண்ட கால பிரதேச சபை உறுப்பினரும், ஐக்கிய தேசிய கட்சியின் பிரதேசத்திற்கான அமைப்பாளருமான எல்.ரி.எம் புர்கான், ஐக்கிய தேசிய கட்சியின் கல்குடா தொகுதிக்கான இளைஞர் அமைப்பாளரும், முதலாம் வட்டார வேட்பாளருமான சபீர் மெளலவி ஆகியோர்கள் தோல்வியினை சந்தித்துள்ளனர். இதுவும் கல்குடா அரசியலில் பாரிய மாற்றத்தினை எதிர் காலத்தில் தோற்றுவிக்க அதிக வாய்ப்பிருக்கின்றது
முன்னாள் உறுப்பினர் இரண்டாம் வட்டரத்தில் வெற்றியடைந்தற்கு பிற்பாடு இடம் பெற்ற நிகழ்வுகளின் காணொளி இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here