கூட்டமைப்பிலிருந்து சுமந்திரனைத் துரத்தச் சொல்கின்றாரா- கஜேந்திரகுமார்

0
203

(பாறுக் ஷிஹான்)

ஒற்றையாட்சியை தமிழர்களுக்கு திணிக்க முயன்ற தமிழர்களை நடுத்தெருவில் விடப்படுவதற்கு காரணமாக இருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமைகள் நீக்கப்பட்டால் மாத்திரமே தமது முடிவுகளை மீள்பரிசோதனை செய்ய முடியும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

நேற்று(11) மாலை செய்தியாளர்களை சந்தித்து கலந்துரையாடிய போது மேற்கண்டவாறு கூறினார்.

நடைபெற்று முடிந்த தேர்தலில் தமது கட்சிக்கு வழங்கப்பட்ட ஆணைக்காக மக்களிற்கு நன்றி தெரிவித்த அவர் தமிழ் மக்கள் பேரவையால் முன் வைக்கப்பட்ட தீர்வு திட்டத்தை ஏற்று தமிழ்த்தேசியத்தின் பாதையில் செல்லக்கூடிய தலைமையோடு இணைந்து செயற்பட தயாராக உள்ளதாகவும் ஒற்றையாட்சியை தமிழர்களுக்கு திணிக்க முயன்றவர்களை தவிர்த்து சமஸ்டியுடன் இணைந்து பயணிக்க விரும்புவர்களிடம் இணையவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதே நேரம் கூட்டமைப்பை விட மோசமான கொள்கைகளை கொண்ட கட்சிகளோடு நாம் ஒருபோதும் இணைந்து செயற்பட போவதில்லை என த.தே.ம.மு தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேலும் தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி தேர்தல் முடிவுகளின் பின்னரே அவர் தனது கருத்தை இவ்வாறு அழுத்தமாக கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here