த.தே.கூ ஆட்சியமைக்க முன்னணி ஒத்துழைப்பு தர வேண்டும் -சிறிகந்தா

Spread the love

(பாரூக் ஷிஹான்) 

வடக்கு, கிழக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆட்சி அமைக்க தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழர் விடுதலை கூட்டணி ஆரதவு வழங்க வேண்டும் என்று ரேலோ அமைப்பின் செயலாளர் நாயகமும் சட்டத்தரணியுமான சிறீக்காந்தா வேண்டுகோள் விடுத்தார்.

இதற்கு தமிழ் தேசிய மக்களும் முன்னணியில் இருந்து சில சாதகமான கருத்துக்கள் வந்துள்ளது என்றும் அவர் தகவல் வெளியிட்டார்.

யாழில் உள்ள யூ.எஸ் கோட்டலில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இவ் விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்:-

தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு இத் தேர்தலில் பின்னடைவு ஏற்ப்பட்டுள்ளதை ஏற்றுக் கொள்ளுகின்றேம்.

எமது பின்னடைவுக்கு சில காரணங்கள் உள்ளன. யாழ். மாநகர சபை, நல்லூர் பிரதேச சபையில் மதவாத கருத்தக்கள் பரப்பப்பட்டன. இது சுயேட்சைக் சில செய்தன.

இறுதி 10 நாட்களில் தான் எமது பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியிருந்தோம். இதுவும் எமது பின்னடைவுக்கு காரணம். ஆனாலும் விரல்விட்டு எண்ணக்குடிய சில சபைகளை தவிர பெரும்பாலான சபைகளின் நாங்கள் முன்னிலை வகிக்கின்றோம்.

எதுவாக இருந்தாலும் எந்த கட்சியும் தனித்து ஆட்சி அமைக்க முடியாத நிலையிலே அனைத்து சபைகளின் தேர்தல் முடிவுகள் காணப்படுகின்றன.

இந்த நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னிலையில் இருக்கும் சபைகளில் ஆட்ச்சி அமைக்க தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழர் விடுதலை கூட்டணி என்பன ஒத்துளைப்பு தர வேண்டும்.

சாவகச்சேரி நகர சபை, பருத்தித்துறை நகர சபை என்பவற்றில் முன்னிலையில் உள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆட்ச்சி அமைக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு முழுமையான ஆதரவினை வழங்கும்.

தேர்தல் பிரச்சாரத்தின் போது நாங்கள் ஒவ்வொருவர் மீது குற்றச்சாட்டுக்களை அடுக்கினோம். ஆனால் தேர்தலின் பின்னர் மக்களுக்கு செய்ய வேண்டுய கடமைகளை செய்வதற்க்கு ஒன்றுபட வேண்டும். பங்காளிகளாக இருக்காவிட்டாலும் பகை இல்லாமல் சபைகளை நடத்தி மக்களுக்கான சேவையினை செய்ய வேண்டும்.

பிரித்து நினற எங்களுக்கு இத் தேர்தலில் மக்கள் ஒரு ஆணையை தந்துள்ளார்கள். அதணை ஏற்று செயற்ப்பட வேண்டியது தமிழ் கட்சிகளின் கடமையாகும்.

தமிழ் தேசிய கூட்டமைப்புற்க்கு வாக்களித்த மக்களின் நம்பிக்கை வீன்போகாது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒற்றுமையாக இருக்கின்றது. தமிழ் மக்களுக்கு கொடுத்த வாக்குறிதிகள் எமது நெஞ்சில் இருக்கின்றது. தமிழ் இனம் தலை நிமிர நாங்கள் என்ன விலை என்றாலும் கொடுக்க தயாராக இருக்கின்றோம் என்றார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*