ஓட்டமாவடி பகுதியில் பொலிசாரிடம் “மௌகனி” சிக்கியது!

0
207

(எஸ்.எம்.எம்.முர்ஷித்)    

ஓட்டமாவடி பகுதியில் வைத்து சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட மௌகனி மரங்கள் இன்று வியாழக்கிழமை கைப்பற்றப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் சட்டவிரோத மரங்கள் கொண்டுவரப்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் வேண்டுகோளுக்கிணங்க மேற்கொண்ட நடவடிக்கையின் பயனாக மௌகனி மரங்கள் ஓட்டமாவடியில் வைத்து கைப்பற்றப்பட்டுள்ளன.

குருநாகல் பகுதியில் இருந்து வெட்டப்பட்ட தென்னை மரங்களுடன் மறைத்து வைக்கப்பட்டு கொண்டுவரப்பட்ட மௌகனி பலகையும், மரக்கட்டியும் கைப்பறப்பட்டுள்ளதாகவும், இதன்பெறுமதி இரண்டரை இலட்சம் ரூபாய் இருக்கலாம் எனவும் பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மரங்களை ஏற்றி வந்த வாகனமும் பொலிஸ் உத்தியோகத்தர்களால் கைப்பற்றப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here