யாழில் எந்த கட்சிக்கு ஆதரவு? ஜனாதிபதியே முடிவெடுப்பார் -அங்கஜன்

0
238

(பாறுக் ஷிஹான்)

உள்ளுராட்சி சபைகளில் ஆட்சியமைப்பது குறித்து கட்சிகளிடையே பலத்த போட்டிகள் நிலவி வருகின்ற நிலையில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடு குறித்தான இறுதி முடிவை ஐனாதிபதியே எடுப்பாரென அக் கட்சியின் யாழ் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஐன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

சபைகளில் ஆட்சியமைப்பதற்கு யாருக்கும் எதிராக எங்களது கட்சி இருக்காது. ஆனால் தவறான செயற்பாடகள் உள்ளிட்ட எல்லாவற்றுக்கும் நாம் ஆதரவை வழங்குவோம் என்றும் யாரும் எதிர்பார்க்க முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

நடைபெற்ற தேர்தல் முடிவகளினடிப்படையில் உள்ளுராட்சி மன்றங்களில் ஆட்சியமைப்பதற்கு ஒரு கட்சிக்கு ஏனைய சில கட்சிகளது ஆதரவ நிச்சயம் தேவை என்ற நிலை உருவாகியிருக்கின்றது. இவ்வாறானதொரு நிலையில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடு குறித்தக் கேட்ட போதே அங்கஐன் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது விடயம் குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்..

உள்ளுராட்சி சபைகளில் ஆட்சியமைப்பதற்கு யாருக்கும் எதிராக நாங்கள் நிற்க மாட்டோம். எங்களோடு யாரும் இணைந்து செயற்படலாம். நூங்கள் யாருக்கும் ஆதரவ என்றும் இல்லை. யாருக்கு எதிர் என்றும் இல்லை. நல்வற்றுக்கு ஆதரிப்போம். பிழையானவற்றுக்கு எதிர்ப்போம்.

இதே வேளை உள்ளுராட்சி மன்றங்களில் எங்களது கட்சியின் இறுதி முடிவை கட்சித் தலைவரான ஐனாதிபதியுடன் பேசியே எடுக்க முடியும். இதனடிப்படையில் இதுவரையில் இறுதித் தீர்வு எட்டப்படவில்லை. அகவே உயர் மட்டத்துடன் பேசி விரைவில் எமத இறுதி முடிவை அறிவிப்போம் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here