பிரதிக் கல்விப்பணிப்பாளராக வீ.ரீ.அஜ்மீர் நியமனம்.

0
183

(ஓட்டமாவடி எச்.எம்.எம்.பர்ஸான்)

கோறளைப்பற்று மேற்கு கல்விக் கோட்டத்திலுள்ள பிறைந்துரைச்சேனை சாதுலியா வித்தியாலயத்தில் ஆசிரியராக கடமை புரிந்த வீ.ரீ.அஜ்மீர் அவர்கள் இலங்கை கல்வி நிர்வாக சேவைப் பரீட்சையில் சித்தியடைந்து தற்போது மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தில் பிரதிக் கல்விப்பணிப்பாளராக தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக அண்மையில் பொறுப்பேற்றுக் கொண்டார்.

புதிதாக கடமையேற்ற பிரதிக் கல்விப்பணிப்பாளரான வீ.ரீ.அஜ்மீர் அவர்களுக்கு கல்வி அதிகாரிகள், பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், நலன்விரும்பிகள் எனப்பலரும் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here