முஸ்லிம் முன்னனேற்றக் கழகத்தினால் GCE O/L சாதனை மாணவர்களுக்கு கௌரவிப்பு.

0
302

(அஷ்ரப் ஏ சமத்)

முஸ்லீம் கல்வி முன்னனேற்ற கழகம் 10ஆவது வருடமும் க.பொ.த. சா.தரத்தில் சகல பாடங்களிலு்ம் 9 ஏ எடுத்த 350 முஸ்லீம் மாணவ மாணவிகளை கொழும்புக்கு அழைத்து தலா ஒவ்வொருவருக்கும் 12000/= பெறுமதியாக பணப்பரிசில்கள், சான்றிதழ் பதக்கம் வழங்கி கொளவிக்கப்பட்டனா்.

இந்நிகழ்வு இன்று (18) கொழும்பு நூலகத்தில் இச் சங்கத்தின் தலைவா் முன்னாள் முஸ்லீம் சேவைப் பணிப்பாளா் அகமத் முனவா் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக வா்த்தக வாணிப கைத்தொழில் அமைச்சா் றிசாத் பதியுத்தீன் கலந்து கொணடாா், பாரளுமன்ற உறுப்பினர் முஜிபு ரஹ்மான், தென்கிழக்கு பல்கழைக வேந்தா் பேராசிரியா் இசாக், விசேட அதிதிகளாக மூசான் இன்டநெசனல் நிறுவனத்தின் தலைவா் முஸ்லிம் சலாஹூத்தீன், பிரதம பேச்சாளா் அக்ரம் நூர்,  அமித், தோ்தல்கள் ஆணையாளா் எம்.எம். முஹம்மத், கலாநிதி எம்.ஏ.எம். சுக்ரி, என்.எம்.அமீன் கொழும்பு சாஹிராக் கல்லுாாி அதிபா் றிஸ்வி மரிக்காா் கைரியா கல்லுாாி அதிபா், உட்பட மாணவ மாணவிகள் பெற்றோா்களும் கலலந்து கொண்டு சிறப்பித்தனா்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here