ஈரான் விமானம் விழுந்து நொறுங்கியது பயணித்த 66 பேரும் பலி!

0
378

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இருந்து யசூஜ் நகருக்கு சென்ற விமானம் நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

தெஹ்ரானில் இருந்து யசூஜ் பகுதிக்கு 66 பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்ற விமானம் புறப்பட்ட 20 நிமிடங்களுக்கு பின் ரேடாரை விட்டு விலகியுள்ளது.

ரேடார் குறியீடுகளை வைத்து பார்க்கும் போது விமானம் அவசர அவசரமாக தரையிறங்கு முயற்சித்தது தெரியவந்தது.

எனினும் ஜாக்ரோஸ் மலை பகுதியில் அது விழுந்து நொறுங்கியுள்ளது. அங்குள்ள விமானத்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் அதிகாரிகள் முயற்சித்து வருகின்றனர்.

விமானம் நொறுங்கி விழுந்த பகுதி மலைப்பாங்கான பகுதி என்பதால் அங்கு ஆம்புலன்ஸ் வாகனங்களை நேரடியாக இயக்க இயலாத சூழல் உள்ளது.

விமானத்தில் பயணித்த 66 பேரும் இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஈரானின் மூன்றாவது மிகப் பெரிய விமான நிறுவனமான ஆசிமான் விமான நிறுவனத்தின் விமானம் விபத்துக்குள்ளானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விமானத்தை தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here