பொறுப்பு வாய்ந்த அமைச்சை ஹலீமுக்கு வழங்குங்கள் இணைப்பாளர் அஸ்வான் சக்காப் மௌலானா

0
664

 

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

ஐ.தே.கட்சியில் அன்று தொட்டு இன்றுவரை அசையாத ஒரு சொத்தாக இருந்து வருபவர் அமைச்சர் எம்.எச் ஏ.ஹலீம். அவருக்குமிகப் பொறுப்பு வாய்ந்த அமைச்சர் ஒன்றினை வழங்க வேண்டுமென அமைச்சின் இணைப்பாளர் அஸ்வான் சக்காப் மௌலானாகேட்டுக் கொண்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

முன்னாள் அமைச்சர் ஏ.சி.எஸ் ஹமிது காலத்தில் இருந்து இன்று வரைக்கும் அசையாமல் இடம் பிடித்து நாட்டின் அனைத்துஇன மக்களின் மனம் கவர்ந்தவர் அமைச்சர் ஹலீம். நேர்மையுள்ள ஊழலற்ற உண்மையை பேசும் ஓர் அரசியல் சக்தியாகஇருந்து வருபவர். சென்ற பாராளுமன்ற தேர்தலில் அனைத்து முஸ்லிம் வேட்பாளர்களில் அதிகூடிய விருப்பு வாக்குகளைபெற்று அமோக வெற்றியீட்டிவர். நடந்து முடிந்த உள்ளூராட்சி தேர்தலிலும் கூட, அனைத்து அமைச்சர்களின் இடங்கள் எல்லாம்தோல்வியை தழுவிய போதும், அவரது சொந்த இடமான அக்குறணை பிரதேசத்தை அமோக வெற்றியீட்டி காட்டியவர். நல்லாட்சியில் வேறு வேறு அமைச்சர்களை கொண்டு பல அபிவிருத்திகளை செய்து காட்டியவர். எனவே அமைச்சர்ஹலிமுக்கு அமைச்சரவை மாற்றத்தின் போது மிகவும் பொறுப்பு வாய்ந்த அமைச்சர் ஒன்றினை வழங்க வேண்டும் என பிரதமர்ரணில் விக்ரமசிங்கவைக் கேட்டுக் கொள்கிறேன். என்றும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here