கட்சித் தலைமை மீது காழ்ப்புணர்வு கட்டவிழ்த்துவிடப்படுகிறது!

0
318

இம்முறை உள்ளூராட்சி சபைத்தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சி பலரிடையே உளவியல் ரீதியாக தாக்கத்தை உண்டுபண்ணியுள்ளது. மறைந்த தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்கள் எவ்வாறு அந்நாட்களில் முஸ்லிம் மக்களால் மிகப்பெரும் சக்தியாக மதிக்கப்பட்டாரோ, அது போன்று இன்று தேசியத் தலைவர் றிசாட் பதியுதீனை மக்கள் ஏற்றுக்கொண்டுவிட்டதன் வெளிப்பாடு அவர்மீது காழ்ப்புணர்வினை
கற்றை கற்றையாக கட்டவிழ்த்து விடுகின்றனர்.

அதிலும் குறிப்பாக, அம்பாறை மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வேரூன்றி 41000 க்கும் மேற்பட்ட வாக்குகளை தனியே மயில் சின்னத்தில் பெற்றுக் கொண்டமை ஏனைய கட்சி ஆதரவாளர்கள் வயிற்றில் புளியைக் கரைத்துள்ளது.

ஆகவே தான் வெறித்தனமாக விமர்சிக்க ஆரம்பித்து விட்டார்கள். அதன் ஓர் அங்கமாக ஊடகவியாளர் ஒருவரின் தனிப்பட்ட உரையாடலை கட்சியோடும் கட்சித்தலைமையோடும் சேர்த்துப் பதிவு செய்யும் இழிநிலை அரசியலை அரங்கேற்றியிருக்கின்றார்கள்.

கட்சிக்கோ கட்சித்தலைமைக்கோ சம்மந்தமில்லாத விடையத்தினை, முழங்காலுக்கும் மொட்டைத்தலைக்கும் முடிச்சுப்போட்டு இணைத்துப் பார்க்கின்றார்கள். அண்மையில் சபீக் ரஜாப்தீன் கிழக்கு மக்களைக் கீழ்தரமாக பேசிய போது எவரும் முஸ்லிம் காங்கிரஸையோ அல்லது அதன் தலைமை ஹக்கீமையோ சாடவில்லை. மாறாக சபீக் ரஜாப்தீனுக்கு எதிராகவே போர்க்கொடி தூக்கியிருந்தார்கள்.

ஆனால் இந்த ஊடகவியளாளர் விடையத்தில் ஊடகவியளாரான அவரின் தனிப்பட்ட செயலுக்காக அவரின் மீது கவனம் செலுத்தாமல், கட்சியின் மீதும் தலைமை மீதும் நாட்டம் செலுத்துவதானது ஏற்றுக்கொள்ள முடியாததாகும். எவருடைய சுய விருப்பு வெறுப்புகளுக்கோ கட்சியோ அதன் தலைமைத்துவமோ பொறுப்புக்கூற முடியாது.

ஆகவேதான் இந்த இழிநிலை விமர்சனகாரர்கள், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் எனும் பேரியக்கத்தினையும் அதன் தலைமைத்துவத்தினையும் மறைந்த மாமனிதர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரபின் பின்னரான ஒட்டு மொத்த முஸ்லிம்களின் குரலாக நோக்க வேண்டுமே தவிர தனிப்பட்ட சிலரின் சில்லறைத்தனமான செயல்களின் கூடமாக அல்ல.

சிபான் BM
மருதமுனை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here