காத்தான்குடி -அல்-ஹிறா மஹா வித்தியாலயத்தின் இல்ல விளையாட்டுப் போட்டியின் இறுதி நாள் நிகழ்வு –நாளை

0
279

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் காத்தான்குடி பிரதேச கல்விக் கோட்டத்திலுள்ள காத்தான்குடி அல்-ஹிறா மஹா வித்தியாலயத்தின் 2018 வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியின் இறுதி நாள் நிகழ்வு 23 நாளை வெள்ளிக்கிழமை பிற்பகல் 4.மணிக்கு காத்தான்குடி -05 ஆற்றங்கரையிலுள்ள காத்தான்குடி அல்-ஹிறா மஹா வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

அல்-ஹிறா மஹா வித்தியாலய அதிபர் ஏ.ஜி.எம்.ஹகீம் தலைமையில் இடம்பெறவுள்ள மேற்படி வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியின் இறுதி நாள் நிகழ்வில் பிரதம அதிதியாக மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் கலந்து கொள்ளவுள்ளதோடு கௌரவ மற்றும் சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எஸ்.இஸ்ஸதீன், காத்தான்குடி பிரதேச செயலாளர் உதயகுமார் உதயஸ்ரீதர், பிரதேச கல்விப் பணிப்பாளர் எம்.ஏ.சீ.எம்.பதுர்தீன், காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் எம்.எஸ்.எம்.ஜாபிர், மட்டு- மத்தி கல்வி வலயத்தின் நிருவாக உத்தியோகத்தர்; சீ.எம்.ஆதம்லெப்பை, பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி யூ.எல்.நஸீர்தீன், யூனானி வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் யூ.எல்.எம்.ஜலால்தீன், காத்தான்குடி நகர சபை செயலாளர் எம்.ஆர்.எப்.றிப்கா ஷபீன், இலங்கை மின்சார சபையின் காத்தான்குடி பிரதேச மின் அத்தியட்சகர் பொறியியலாளர் ஏ.சீ.எம்.நௌபல் உட்பட கல்வியலாளர்கள், ஊர் பிரமுகர்கள் என பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

எமெரல்ட், றூபி, சபெயர் ஆகிய மூன்று இல்லங்களாக பிரிக்கப்பட்டு இடம்பெறவுள்ள குறித்த இல்ல விளையாட்டுப் போட்டியில் மாணவர்களின் ஆற்றல்களை வெளிக்கொணரும் 60 தொடக்கம் 100 மீட்டர் வரையிலான ஓட்டம் , அணி நடை , உடற்பயிற்சி கண்காட்சி போன்ற பல்வேறு விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here