வாழைச்சேனை – செம்மண்ணோடையில் நடைபெற்ற நடமாடும் சேவை.

0
170

(எச்.எம்.எம்.இத்ரீஸ்)

கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை பிரதேச செயலகப் பிரிவின் கீழுள்ள செம்மண்ணோடை மற்றும் மாவடிச்சேனை ஆகிய பிரதேச மக்களின் அவசியத் தேவையினை கருத்தில் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட நடமாடும் சேவை நேற்று (22) ம் திகதி வியாழக்கிழமை செம்மண்ணோடை கிராம அபிவிருத்தி சங்கக் கட்டிடத்தில் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது.

இந் நடமாடும் சேவையில் பிரதேச செயலக, பொலிஸ் நிலைய தேவைகளை பொது மக்கள் மிக இலகுவான முறையில் பெற்றுகொண்டமை சுட்டிக்காட்டத்தக்கது. இந் நடமாடும் சேவையில் பிரதேச செயலாளர், பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் உத்தியோகத்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்டு மக்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொடுத்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here