மீள் எழுச்சி

0
331

(எம்.எம்.ஏ.ஸமட்)

வர்த்தக சந்தையில் போட்டிச்சந்தை என்பது பொதுவாக நுகர்வோருக்குச் சாதகமானது. ஏனெனில், வர்த்தக சந்தையில் விற்பனை நிலையங்கள் அதிகரித்துக் காணப்படுகின்றபோது தரமான பொருட்களைக் தெரிவு செய்வதிலும், கொள்வனவு செய்வதிலும்; நுகர்வோருக்கு சிரமம் இருக்காது. விரும்பும் விற்பனை நிலையத்தில் தரமான பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கான சந்தர்ப்பமும் கிடைக்கின்றது. அதனால்தான், நம் முன்னோர் ‘கீரைக் கடைக்கும் எதிர் கடை வேண்டும்’ என்று கூறியிருக்கிறார்கள். நடந்து முடிந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் மக்கள் தாங்கள் விரும்பி கட்சிகளுக்கு அளிதுள்ள வாக்குகள் இம்முதுமொழியைப் பறைசாட்டுவதாகக் கொள்ளலாம்.

இந்நிலையில், தேர்தல் நடைபெற்று இரு வாரங்கள் கடந்தும் மழைவிட்டும் தூரல் நிற்கவில்லை என்பதுபோல கொழும்பு அரசியல் நகர்ந்து செல்கிறது. தேசிய அரசியலில் உருவாகியுள்ள அரசியல் தாழமுக்கம் கலைந்து விட்டதாக புரிய முடியாதுள்ளது. இச்சந்தர்ப்பத்தில், தென்னிலங்கை மக்களின் பேராதரவுக் கட்சிகளாக் கருதப்படும் ஐக்கிய தேசிக் கட்சிக்கும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் தேர்தல் முடிவுகள் ஏற்படுத்திய தாக்கம்போல் முஸ்லிம் தேசியத்தின் அரசியலிலும் இத்தேர்தல் முடிவுகள் இக்கீரைக் கடைக்கும் எதிர் கடை இருக்க வேண்டும் என்பதை மிகத் துள்ளியமாக தெரியப்படுத்தியிருப்பதை அவதானிக்க முடிகிறது.

ஏனெனில் இலங்கை வாழ் முஸ்லிம்கள் நடைபெற்று முடிந்து தேர்தலில் தாம் விரும்பி கட்சிகளுக்கு வாக்களித்திருக்கிறார்கள் என்பதை கட்சிகள் பெற்றுள்ள வாக்குகளையும், உறுப்பினர்களின் எண்ணிக்கையையும் கொண்டு; அறியக்கூடியதாகவுள்ளதுடன், முஸ்லிம் சமூகம்சார் கட்சிகளின் வளர்ச்சி, எழுச்சி, வீழ்ச்சி என்பவற்றை தேர்தல் வாக்களிப்பு வரைபு புடம்போட்டிருப்பதை அவதானிக் முடியும். இருப்பினும், முஸ்லிம் தேசியம் அரசியலில் ஒற்றுமை காணத் தவறியிருக்கிறது என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டும்.

முஸ்லிம்களும் அரசியலும்

2 கோடி 35 இலட்சம் இலங்கை மக்கள் தொகையில் கிட்டத்தட்ட ஒரு கோடி 58 இலட்சம் பேர் வாக்காளர்கள்.. இவ்வாக்காளர்கள்;; இத்தேர்தலில் போட்டியிட்ட அரசியல் கட்சிகளுக்கும், சுயேட்சைக்குழுக்களுக்கும் வளர்ச்சியியையும், மீள் எழுச்சியையும், வீழ்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

இந்நிலையில், 2012 சனத்தொகைக் கணக்கெடுப்பின் பிரகாரம், இலங்கை வாழ் 1, 967, 523 இலட்சம் முஸ்லிம்களில் வடக்கு, கிழக்கு தவிர்ந்த ஏனைய 7 மாகாணங்களிலும் 1, 358, 626 பேர் உள்ளனர். தென்னிலங்கை வாழ் முஸ்லிம்களில்; கணிசமான வாக்காளர்கள் ஒவ்வொரு தேர்தல்களின்போது ஐக்கிய தேசியக் கட்சிக்கும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் தொண்டுதொட்டு வாக்களித்து வருகின்றனர். இத்தேர்தலிலும், இவ்விரு கட்சிகளுக்கும் வாக்களித்துள்ளதுடன், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் வழி நடத்தப்படும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனைக்கும், அவர்சார் சுயேட்சைக்குழுக்களுக்கும், மக்கள் விடுதலை முன்னணிக்கும் வாக்களித்திருக்கிறார்கள். அத்துடன், குறிப்பிட்ட எண்ணிக்கையான தென்னிலங்கை முஸ்லிம் வாக்காளர்கள் தென்னிலங்கை முஸ்லிம் பிரதேசங்களில் போட்டியிட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஆகிய கட்சிகளுக்கும் வாக்களித்துள்ளனர்.

இவ்வாறு, வடக்கு மற்றும் கிழக்கில் வாழுகின்ற 608, 897 முஸ்லிம்களிலுள்ள வாக்காளர்கள் இவ்விரு மாகாணங்களிலும்; யானை சின்னத்திலும் கட்சிச் சின்னங்களிலும் இணைந்தும் தனித்தும் போட்டியிட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ{க்கும், கை சின்னத்தில் இணைந்தும் குதிரைச் சின்னத்தில் தனித்தும் போட்டியிட்ட தேசிய காங்கிரஸக்கும்; இவற்றுடன்; தனித்துப் போட்டியிட்ட நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஆகிய கட்சிகளுக்கும் இக்கட்சிகள்சார் கூட்டமைப்புக்களுக்கும், சுயேட்சைக் குழுக்களுக்கும் வாக்களித்துள்ளனர்.

முஸ்லிம்களில் பெரும்பான்மையானோர் வடக்கு. கிழக்கிற்கு வெளியே வாழ்ந்தபோதிலும், அநேகமான முஸ்லிம் பிரதிநிதிகள் ஆட்சிச் சபைகளுக்குத் தெரிவு செய்யப்படுவது கிழக்கு மாகாணத்திலிருந்தான் என்பது வரலாற்று உண்மையாகும். 1931ஆம் ஆண்டில் தொகுதி ரீதியான தேர்தல் நடைபெற்றபோது இலங்கையில் 3 தொகுதிகளில் முஸ்லிம்களின் வாக்குப்பலத்தினால் பாராளுமன்றத்திற்கு பிரதிநிதிகளை அனுப்பக் கூடிய பலமிருந்தும் அன்றைய தேர்தல் முடிவுகளின்படி மட்டக்களப்பு தெற்குத் தொகுதியில் மாத்திரம்தான் ஒரு முஸ்லிம் பிரதிநிதியாக சேர் மாக்கான் மாக்கார் தெரிவானா அவர் தென்னிலங்கையை பிறப்பிடமாவும்  வசிப்பிடமாகவும் கொண்டிருந்தபோதிலும் கிழக்கிலிருந்தே அன்று சட்டசபைக்குத் தெரிவு செய்யப்பட்டார் என்பது வரலாறாகும்.

தனிக்கட்சியொன்றை உருவாக்கி செயற்படவும் கூடுதலான மக்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்குமான மக்கள் சக்தியும் வாக்குப்பலமும் முஸ்லிம்கள் கிழக்கில் செறிந்து வாழ்வதனால் சாத்தியமாகிறது. இதனாலேயே தெற்கு முஸ்லிம் தலைமைகள் அக்காலத்தில் சட்டசபைக்கும், பாராளுமன்றதிற்கும் செல்வதற்காக கிழக்கில் போட்டியிட்டார்கள் என்பதை சரித்திரம் சான்றுபடுத்துகிறது.

அடிப்படை உரிமைகளைப் பேனிப்பாதுகாக்கவும், அடக்கப்பட்ட உணர்வுகளை வெளிக்காட்டுவதற்குமாக பலமுள்ள ஒரு தனித்துவமிக்க அரசியல் கட்சியை முஸ்லிம் தேசியம்; எப்போதும் வேண்டி வந்திருக்கிறது. அதற்காக அவ்வப்போது பலரின் முயற்சியால் முஸ்லிம் சமூகம்சார் கட்சிகள் உருவாக்கப்பட்டன. ஆனால்  அவை சமூகத்தின் முழுமையான ஆதரவை பெற முடியாததனால் அவற்றின் இருப்பை தக்க வைத்துக்கொள்ளவில்லை. இஸ்லாமிய ஐக்கிய முன்னணி, இஸ்லாமிய சோஷலிச முன்னணி, மாக்ஷிய எதிர்ப்பு முன்னணி, கொழும்பு முஸ்லிம் ஐக்கிய முன்னணி போன்ற அரசியல் கட்சிகளை இவற்றுக்கு உதாரணங்களாகக் குறிப்பிடலாம். இருப்பினும், முஸ்லிம்களுக்கான தனிக்கட்சி என்ற உணர்வு கரைந்து செல்லாது சமூகத்தின் மத்தியில் தொடர்ந்தும் காணப்பட்டது.

இந்த உணர்வுச் சிந்தனைகளின் தொடர் வெளிப்பாடாகவே காத்தான்குடியில் 1980ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற இயக்கம் உருவாக்கப்பட்டு, அது 1986ஆம் ஆண்டு தலைவர் அஷ்ரஃப் அவர்களின் தலைமைத்துவத்துடனான அரசியல் கட்சியாக பதிவு செய்யப்பட்டு வளர்ச்சியடைந்தமையாகும். அஷ்ரபின் தலைமைத்துவத்துடனான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அவர்; மரணிக்கும் வரை சந்தித்த அத்தனை தேர்தல்களிலும் வடக்கு மற்றும் கிழக்கு முஸ்லிம்களின் வாக்குகளினால் வெற்றி கண்;டதுடன் மக்களின் அபிலாஷைகளும், வரலாற்று அபவிருத்திகளும் அவரது குறுகிய கால அரசியல் தலைமைத்துவத்துடனும், அரசியல் அதிகாரங்களினூடாக மேற்கொள்ளப்பட்டன. அத்துடன், அரசியல் அநாதைகளாக, கண்டுகொள்ளப்படாத சமூகமாக இருந்த முஸ்லிம்கள் ஆட்சி மாற்றத்தின் பலமான சக்தி என்பதை இத்தேசத்துக்குப் புடம்போட்ட பெருமையும் அஷ்ரபையே சாரும் என்பதை மறுப்பதற்கில்ல.

முஸ்லிம் காங்கிரஸிலிருந்து தேசிய காங்கிரஸ்

முஸ்லிம் காங்கிரஸின் தலைமைத்துவம்; அஷ்ரபின் மரணத்தின் பின்னர் கைமாறப்பட்டு கட்சி புதிய தலைமைத்துவத்தினால் முன்னெடுக்கப்பட்டு வந்தவேளை இக்கட்சியின் பல உயர்பீட உறுப்பினர்கள் கட்சியின் புதிய தலைமைத்துவத்தின் செயற்பாடுகளில் நம்பிக்கையிழந்தனர். தலைவர் அஷ்ரஃப் உருவாக்கிய கட்சி சிதைக்கப்படக் கூடாது என்பதில் அக்கரை கொண்ட உயர்பீட உறுப்பினர்கள் அக்கட்சியின் தலைமையை மாற்ற விரும்பினர்.

“எனது தலைமையின் மீதோ அல்லது மத்திய குழுவின் மீதோ உங்களுக்கு நம்பிக்கை அற்றுப் போயின் எனது தலைமையையும் மத்திய குழுவையும் மாற்ற வேறு ஒரு அரசியல் கட்சியின் தலைவரோ அமைப்போ அவசமில்லை. இக்கட்சியிலேயே சேர்ந்து இக்கட்சியையே வழி நடத்தி இக்கட்சியையே பொறுப்பேற்று இக்கட்சி மூலமே உங்கள் நியாயங்களைப் பெறுவதற்கு நானோ, வேறு யாருமோ தடையாய் ஒருபோதும் இருக்க மாட்டோம்” என்ற மறைந்த தலைவரது வாக்கை நிலைப்படுத்தவும் அக்கட்சியை விட்டுச் செல்லாமல் கட்சியின் தலைமைத்துவத்தை மாற்ற வேண்டிய தேவை கட்சியின் உயர்பீட உறுப்பினர்களுக்கு ஏற்பட்டவேளை கட்சிக்குள் இருந்து கொண்டு கட்சித் தலைமையை மாற்ற முற்பட்டமை முஸ்லிம் காங்கிரஸின் வராற்றுப் பின்னணியில் ஒரு பாகமாகும்.

அப்பாகத்தில் கட்சியின் தலைமையை மாற்றுவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சி வெற்றியளிக்காததையடுத்து கிழக்கு தலைமைத்துவத்துடன் கூடிய தனிக்கட்சியொன்றை அமைக்க வேண்டிய தேவை அன்றைய மு.க. உயர் பீட உறுப்பினர்களுக்கு ஏற்பட்டது. இந்த வரலாற்றுப் பின்னணியில் அஷ்ரப் என்ற ஓர் ஆளுமைமிக்க தலைமைத்துவத்தின் பாசறையில் வளர்ந்த முன்னாள் அமைச்சர் அதாவுல்லாவினால்; 2002ஆம் ஆண்டு அஷ்ரப் காங்கிரஸ் எனும் இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது அவ்வியக்கம் பின்னர் தேசிய முஸ்லிம் காங்கிரஸ் எனப் பெயர் மாற்றப்பட்டு அதன் பிற்பாடு;; தேசிய காங்கிரஸ் என பெயர் மாற்றப்பட்டது.

2005இல் தேசிய காங்கிரஸ் அரசியல் கட்சியாகப் பதிவு செய்யப்பட்ட பின்னர் கட்சியின் தலைவர் ; அதாவுல்லா ஆற்றிய உரையினை இங்கு குறிப்பிடுவது காலத்தின் பொருத்தமாகும். “ஒரு ஆளுமைமிக்க தலைமைத்துவத்தின் பாசறையில் வளர்ந்த வாரிசுகள் நாம். அந்த தலைமையின் வழிப்படுத்தலும், நெறிப்படுத்தலும் நம்மை நமது சமூக விடுதலையை நோக்கிப் பயணிக்கச் செய்தன. நாம் நமது அபிலாஷைகளை வென்றெடுக்கும் போராட்டத்திற்காகக் களமிறங்கினோம். நமது விடுதலைக்கான குரலாகவும் ஒலித்தோம். நமது போராட்டத்தின் நேர்மையும் கூர்மையும் பகைவர்களைக் கூட பயங்கொள்ளச் செய்தன. நமது ஒற்றுமை நமது போராட்டத்தின் வலிமைமிக்க ஆயுதமாயிற்று. நாம் தேசமெங்கும் பேசப்பட்டோம். அந்த தருணத்தில்தான் விரோதிகளின் குறிக்கு நமது தலைமை அஷ்ரப் இலக்கானார். நாம்; அந்த பெரும் தலைவரை இழந்தோம்.

ஆயினும் நாம் நமது போராட்டப் பாதையில் நின்றும் சறுகி விடவில்லை. தலைவர் காட்டிய செந்நெறியின்பால் பயணித்தோம். புதிய தலைமைக்கு மகுடமிட்டோம். கட்டளைக்குச் செவிசாய்த்தோம். சமூ விடுதலைக்காய் நம்மை நாம் தியாகித்தோம். ஆனால், நடந்தது என்ன. நம்பிக்கை தர வேண்டிய நமது புதிய தலைமை தன்னலத்திற்கு சோரம் போனது. தனித்துவமான நமது கட்சி மாற்றாரின் கைபொம்மையானது. இதனால், நமது விடுதலைக்கான குரலும் அடைக்கப்பட்டது. நமது போராட்ட வடிவங்கள் மாசுபடுத்தப்பட்டன. நமது தலைவர் அஷ்ரப் கட்டிக்காத்த விடுதலைப் பாதை சிதைக்கப்பட்டது. பார்த்துக் கொண்டிருக்க முடியுமா? வாய் மூடி மௌனித்திருக்க முடியுமா? சமூகத்திற்காகவே கட்சி கட்சிக்காக சமூகமல்ல என்ற நிலைப்பாட்டிற்கு வந்தோம். புதிய தலைமையை புறந்தள்ளினோம் நமது சமூகத்தின் தூய்மையான விடுதலை நோக்கை மட்டும் சுமந்து கொண்டு வெளியேறினோம்.

இப்போது நமது தலைவர் மர்ஹ{ம் அஷ்ரப் அவர்கள் நமக்குச் சொல்லித்தந்த பாடங்களோடும் நம் சமூக விடுதலைக்காய்ப் போராடும் மாசுபடாத கொள்கையோடும் நாம் புதியதோர் அரசியல் ஸ்தாபனத்தை உருவாக்கியுள்ளோம். அதுதான் குதிரைச் சின்னத்துடன் தேசிய காங்கிரஸ் எனும் அரசியல் கட்சியாகும்” என அன்று அவர் கூறி வார்த்தைகள் கிழக்கு முஸ்லிம்களை குறிப்பாக அம்;பாறை மாவட்ட அஷ்ரப் அபிமானிகள் மத்தியில் மாற்றுக் கட்சிக்கான சிந்தனையை வலுப்படுத்தியது என்பதைச் சுட்டிக்காட்டாமல் இருக்க முடியாது. முஸ்லிம் அரசியலுக்கு புத்தணர்ச்சியளித்த மறைந்த அஷரப்; தற்காலத்தில், அரசியல் அனுபவமும் வரலாறும் தெரியாதவர்களினால் விமர்சிக்கப்படுகிறார் என்பது அவரை நேசிக்கின்றவர்களை மிகவும் வேதனைக்குட்படுத்தியிருக்கிறது. அண்மையில், ஊடகவியலாளர் ஒருவரினால் மறைந்த அஷ்ரப் மிக மோசமாக விமர்சிக்கப்பட்டிருப்பது சமூவலைத்தளங்களிலும், ;முஸ்லிம் அரசியலிலும்; வாதப் பிரதிவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது என்பதைச் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.

தேசிய காங்கிரஸும் ஆதரவுச் சரிவும்

மறைந்த அஷ்ரப் முஸ்லிம் காங்கிரஸை உருவாக்கி குறுகிய காலத்திற்குள் கண்ட வெற்றியைப் போல் இல்லையென்றாலும், 2005 முதல் 2012 வரை நடைபெற்ற பொதுத்தேர்தல், மாகாண சபைத்தேர்தல் மற்றும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களில் தனித்தும் இணைந்தும் போட்டியிட்டு, பாராளுமன்றம், மாகாண சபை, பிரதேச, நகர மாநகர சபைகளுக்கான உறுப்பினர்களைப் தேசிய காங்கிரஸ் பெற்றுக்கொண்டது. இதன் மூலம் பல்வேறு அபிவிருத்திப் பணிகள் இக்கட்சியின் தலைமை அதாவுல்லாவினாலும், மாகாண அமைச்சர் உதுமாலெப்பையினாலும் அம்பாறை மாவட்டத்திலும் கிழக்கின் ஏனைய மாவட்டங்களிலும் முன்னெடுக்கப்பட்டதை மறுப்பதற்கில்லை.

2004 முதல் 2015 ஜனாதிபதித் தேர்தல் வரை அம்பாறை மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி தேசிய காங்கிரஸின் தலைவர் அதாவுல்லா தேசிய அரசியலில் அமைச்சராகப் பதவி வகித்ததோடு, இக்கட்சியின். தேசிய அமைப்பாளர்; எம்.எஸ் உதுமாலெவ்வை மாகாண அமைச்சராகவும் பதவி வகித்தமையும், அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று மாநகர சபை மற்றும் அக்கரைப்பற்று பிரதேச சபை என்பன தேசிய காங்கிரஸின் ஆளுகைக்குட்பட்டிருந்தமையும், இக்கட்சி அம்பாறையில் கண்ட வளர்ச்சி எனக் சுட்டிக்காட்ட முடியும். இருப்பினும் 2012 முதல் 2015 வரையான காலப்பகுதியில் இலங்கை முஸ்லிம்களை இன ரீதியான நெருக்கடிக்குள்ளாக்கிய பௌத்த இனவாதக் கடும்போக்காளர்களின் நடவடிக்கைகள் தொடர்பில் கண்டுகொள்ளாத நிலை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் காணப்பட்டமை தென்னிலங்கை முஸ்லிம்களை மாத்திரமின்றி வடக்கு கிழக்கு முஸ்லிம்களையும் மிகவும் கடுபேற்றியிருந்தது.

இந்நிலையில், 2015ல் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு சார்பில் ஜனாதிபதித் தேர்தில் மஹிந்த ராஜபக்ஷ போட்டியிட்டதனால்; தேசிய காங்கிரஸ் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சி எனபதனால் அவரை ஆதரிக்க வேண்டிய நிலை; காணப்பட்டது. இருந்தாலும், 90 வீதமான முஸ்லிம்கள் ஆட்சி மாற்றத்தை நோக்கி தங்களது கருத்துக்களை வெளியிட்டு வந்த நிலையில், மக்களின் நாடித்துடிப்பை உணர்ந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூட்டமைப்பிலிருந்து விலகி பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்தவேளை, தேசிய காங்கிரஸ் தலைமை கொள்கையிலிருந்து மாறாது மஹிந்த ராஜபக்ஷவை அத்தேர்தலில் ஆதரித்து பிரச்சாரம் செய்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

தளராத கொள்கைப்பற்றுடன் அரசியல் பயணத்தை முன்னெடுத்த தேசிய காங்கிரஸ் 2015 ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஐக்கிய மக்கள் கூட்டமைப்பில் அங்கத்துவக் கட்சியாகப் போட்டியிட்டபோதிலும்; அத்தேர்தலில் நாடாளுமன்றத்துக்கான பிரதிநிதித்துவத்தைப் பெற முடியவில்லை.இதற்கு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஜனாதிபதித் தேர்தலில் தேசிய காங்கிரஸ் ஆதரத்துச் செயற்பட்டமையானது ஒரு காரணமாகக் கருதப்பட்டாலும், இக்கட்சியின் உயர் சபை உறுப்பினர்களாகச் செயற்பட்டவர்கள் இக்கட்சியை மக்கள் மத்தியில் முன்கொண்டு செல்வதற்கான ஆக்கபூர்வமான, ஆரோக்கியமான நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை.

குறித்த நபர்கள் அமைச்சர் அதாவுல்லாவின் மூலம் தங்களது நலன்களை வெற்றி கொள்வதில் அதிக அக்கறைகொண்டு செயற்பட்டார்களே தவிர, மக்களுக்கும் தலைவருக்குமான தொடர்பைத் அதிகரிக்கச் செய்யவில்லை. மாறாக அத்தொடர்பைத் தடுத்துச் செயற்பட்டமை பிரதேச மக்கள் மத்தியில் இக்கட்சி தொடர்பிலும் தலைவர் அதாவுல்லா தொடர்பிலும் நல்லபிப்பிராயம் ஏற்படுவதற்குத் தடையாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இவ்விரு காரணங்களுமே கடந்த பாராளுமன்றத் தேர்தலில் இக்கட்சி வாக்குச் சரிவை எதிர்நோக்கியதுடன் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தையும் தக்க வைக்க முடியாது போனதாகச் சுட்டிக்காட்டப்படுகின்றன.

இருந்தும், பிரதமர் ரணில் விக்கரமசிங்கவின் தலைமைத்துவ அரசியலில் இணைந்து தேசிய காங்கிரஸ் தமது அரசியல் பயணத்தை ஒருபோதும் முன்னெடுக்காது என்ற தளராத கொள்கையிலிருந்து விடுபாடது அரசியல் அதிகாரமின்றிய அரசியல் பயணத்தை தேசிய காங்கிரஸின் தலைமை முன்னெடுத்துச் செயற்பட்டதனால்; நடந்து முடிந்த இத்தேர்தல் பெறுபேறு இக்கட்சியை வீழ்;ச்சியிலிருந்து மீள் எழுச்சிய நோக்கி நகரச் செய்துள்ளது.

தேர்தல் வெற்றியும் மீள் எழுச்சியும்

தேசிய காங்கிரஸ் கடந்த 2011ல்; அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று மாநகர சபையில் 11, 821 வாக்குகளைப் பெற்று எட்டு உறுப்பினர்களையும், அக்கரைப்பற்று பிரதேச சபையில் 2, 261 வாக்குகளைப் பெற்று ஆறு உறுப்பினர்களையும் பெற்றுக்கொண்டதுடன் இரு சபைகளினதும் ஆட்சிப் பொறுப்பையும் பெற்றுக்கொண்டது.

அத்துடன், ஐக்கிய மக்கள் கூட்டபை;பின் வெற்றிலைச் சின்னத்தில் இணைந்து போட்டியிட்டு பொத்துவில் பிரதேச சபையில் ஒரு உறுப்பினரையும், இறக்காமம் பிரதேச சபையில் ஒரு உறுப்பினரையும், அட்டாளைச்சேனை பிரதேச சபையில் இரு உறுப்பினர்களையும், சம்மாந்துறைப் பிரதேச சபையில் மூன்று உறுப்பினர்களையும் பெற்றதுடன் 2011 உள்ளுராட்சித் தேர்தல் அம்பாறை மாவட்டத்தில் மொத்தமாக 21 உறுப்பினர்களைப் பெற்றிருந்தது. இந்நிலையில்  நடந்து முடிந்த இத்தேர்தலில் அம்பாறை மாவட்டத்தின் கல்முனை மாநகர சபை, அக்கரைப்பற்று மாநகர சபை, அக்கரைப்பற்று பிரதேச சபை, அட்டாளைச்சேன பிரதேச சபைகளுக்கு தனித்துக் குதிரைச் சின்னத்திலும், பொத்துவில், நிந்தவூர், இறக்காமம், காரைதீவு ஆகிய பிரதேச சபைகளுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் தலைமயிலான ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு சார்ப்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் கைச்சின்னத்திலும் போட்டியிட்டிருந்தது.

இதில், அக்கரைப்பற்று மாநகர சபையில் 11, 988 வாக்குகளைப் பெற்று 13 உறுப்பினர்களையும். அக்கரைப்பற்று பிரதேச சபையில் 2, 544 வாக்குகளைப் பெற்று 05 உறுப்பினர்களையும் பெற்றதுடன் இரு சபைகளினதும் ஆட்சிப் பொறுப்பையும் தனதாக்கிக் கொண்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தின் முஸ்லிம் பெரும்பான்மை பிரதேச சபைகளில் தொங்கு சபைகள் என்ற நிலையில்லாது அக்கரைப்பற்று மாநகர சபை மற்றும் பிரதேச சபைகளில் அறுதிப் பெரும்பான்மை பலத்தை இககட்சி பெற்றிருப்பது அதன் மீள் எழுச்சியின் ஒரு மைக்கல் எனலாம்.. தனித்தும் இணைந்தும் போட்டியிட்ட, பொத்துவில் பிரதேச சபையில் இரு உறுப்பினர்களையும், அட்டாளைச்சேனை பிரதேச சபையில் ஆறு உறுப்பினர்களையும், கல்முனை மாநகர சபையில் ஒரு உறுப்பினரையும் தேசிய காங்கிரஸ் கொண்டிருப்பதுடன், இத்தேர்தல் பெறுபேறுகளின் அடிப்படையில் அம்பாறை மாவட்டத்தில் மொத்தமாக 27 உறுப்பினர்களை தேசிய காங்கிரஸ் பெற்றிருக்கிறது. இத்தேர்திலில் இக்கட்சிக்குக் கிடைத்துள்ள வாக்குகள் மற்றும் உறுப்பினர்களின் எண்ணிக்கை அடிப்படையில் இக்கட்சி வாக்குச் சரிவுகளைச் சரி செய்து மீள் எழுச்சி பெற்றிருக்கிறது என்பதைப் புரியக் கூடியதாகவுள்ளது.

தேசிய காங்கிரஸின் இம்மீள் எழுச்சியானது நிலைபேறான எழுச்சியாகவும், வளர்ச்சியாகவும் அமைய வேண்டுமாயின், இக்கட்சியின் உயர் பீடங்களில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டுமெனவும், கட்சியின் பொறுப்பு வாய்ந்த பதவிகள்; அரசியல் அனுபமிக்கவர்களுக்கும், கட்சி நடவடிக்கைகளை தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்குப் பயன்படுத்தாமல், மக்களை அரவனைத்து, வினைத்திறனுடன் கட்சி நடவடிக்கைகளை முன்னெடுப்பவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். அத்துடன், இக்கட்சிப் பதவிகள் ஏனைய பிரதேசங்களுக்கும் வழங்கப்பட்டு கட்சி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமெனவும், முஸ்லிமகளின் உரிமைகளை வென்றெடுப்பதற்கும், இருப்பைப் பாதுகாப்பதற்கும் ஆக்கபூர்மான நடவடிக்கைகளை முஸ்லிம் தேசியத்தி;ன் எதிர்கால நன்மை கருதி ஏனைய முஸ்லிம் கட்சிகளையும் ஒன்றிணைத்து செயற்பட வேண்டுமென்பது இக்கட்சியை மானசீகமாக விசுவாசிக்கின்றவர்களின் வேணடுகோளாக இருப்பதையும்; சுட்டிக்காட்ட வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here