கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமிய்யாவின் “இலவச கண் பரிசோதனை முகாம்”

0
82

(ஓட்டமாவடி எச்.எம்.எம்.பர்ஸான்)    

இலங்கை முஸ்லிம் வாலிபர் ஒன்றியத்தின் (ஜம்இய்யதுஷ்ஷபாப்) நிறுவனத்தின் அனுசரணையின் கீழ் கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமிய்யா நிறுவனம் ஏற்பாடு செய்த இலவச கண் பரிசோதனை முகாம் நேற்று (24) ம் திகதி சனிக்கிழமை மீராவோடை எம்.பி.சி.எஸ் வீதியில் அமைந்துள்ள தாருஸ்ஸலாம் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

கண்களில் வெள்ளை படர்தல் நோயுள்ளவர்களை இனங்காணும் இம்முகாமில் கல்குடாப்பிரதேசத்தில் வாழும் தமிழ்-முஸ்லிம் இனங்களைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டதில் 66 பேர் மேற்படி கண்களில் வெண்படலமுள்ளவர்கள் என இனங்காணப்பட்டனர்.

இவர்களுக்கான இலவச சத்திர சிகிச்சைகள் எதிர்வரும் (27) ம் திகதி காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில்  இடம்பெறவுள்ளன. நேற்று நடைப்பெற்ற கண் பரிசோதனை முகாம் நிகழ்வில் ஜம்இய்யாவின் பொதுத் தலைவரும் கலாசார உத்தியோகத்தருமான அஷ்ஷெய்க் ஏ.எல்.பீர் முகம்மட் காசிமி , செயலாளர் எஸ்.எச்.அரபாத் சஹ்வி மற்றும் மெளலவி எம்.ரீ.அப்துர்ரஹ்மான் அஸ்ஹரி, சாஜஹான் நஹ்ஜி உட்பட பலரும் கலந்து கொண்டதோடு, பாகிஸ்தானை சேர்ந்த வைத்திய நிபுணர்களால் நோயாளிகள் பரிசோதிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here