கண் சத்திரசிகிச்சைக்கு தெரிவானோர் இன்று காத்தான்குடி வைத்தியசாலைக்கு விஜயம்.

0
218

(அபூ அம்றா) 

ஜம்இய்யதுஷ்ஷபாபின் அனுசரணையுடன் கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமிய்யாவின் ஏற்பாட்டில் கண்களில் வெண் படலம் உள்ளவர்களுக்கான சத்திர சிகிச்சைகள் முற்றிலும் இலவசமாக காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் நடை பெறுகின்றது. கல்குடா பிரதேசத்தில் சத்திர சிகிச்சைக்கென தெரிவு செய்யப்பட்ட 66 பயனாளிகள் இன்று 27.02.2018 ம் திகதி காலை 9.00 மணிக்கு தாருஸ்ஸலாம் பள்ளிவாயலிருந்து காத்தான்குடி வைத்தியசாலை நோக்கி புறப்பட்டுச் சென்றனர்.

இவர்களை வழியனுப்பி வைக்கும் நிகழ்வில் ஜம்இய்யாவின் செயலாளர் .எஸ்.எச்.  அறபாத் ஸஹ்வி சமூக சேவைப் பிரிவின் இணைப்பாளர் ஜே.எம். இம்தியாஸ் ஆகியோர் கலந்து கொண்டு நோயாளிகளை வழியனுப்பி வைத்தனர்.

இவர்களுக்கான சத்திர சிகிச்சைகள் இன்று மாலை நடைபெறவிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here