காத்தான்குடி தபால் நிலைய அதிபர் மஸாஹிர் காரியப்பர் சம்மாந்துறை தபால் நிலைய அதிபராக இடமாற்றம்

0
169
(பழுலுல்லாஹ் பர்ஹான்)
 
மட்டு- காத்தான்குடி தபால் நிலையத்தில் பிரதேச தபால் அதிபராக கடமையாற்றி சம்மாந்துறை பிரதேச தபால் நிலைய அதிபராக இடமாற்றம் பெற்றுச் செல்லும் தபால் அதிபர் கே.எம்.மஸாஹிர் காரியப்பருக்கான பிரியாவிடை நிகழ்வு 26 நேற்று திங்கட்கிழமை பிற்பகல் காத்தான்குடி தபால் நிலையத்தில் இடம்பெற்றது.
 
காத்தான்குடி தபால் நிலையத்தின் அஞ்சல் சேவகர் கே.கேதீஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற மேற்படி பிரியாவிடை நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அஞ்சல் அத்தியட்சகர் காரியாலயத்தின் பிரதம இலிகிதர் ஏ.சுகுமார், மாவட்ட அஞ்சல் அத்தியட்சகர் காரியாலய உத்தியோகத்தர் எஸ்.துஷ்யந்தன், காத்தான்குடி தபால் நிலைய உதவித் தபால் அதிபர்களான எம்.பீ.எம்.அன்சார்,திருமதி பைறூசியா உட்பட காத்தான்குடி தபால் நிலையத்தின் உப தபாலக அதிபர்கள், அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் ,அஞ்சற்காரர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
 
காத்தான்குடி தபால் நிலையத்தின் அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் ,அஞ்சற்காரர்கள் இணைந்து ஏற்பாடு செய்த குறித்த பிரியாவிடை நிகழ்வின் போது இடமாற்றம் பெற்றுச் செல்லும் தபால் அதிபர் கே.எம்.மஸாஹிர் காரியப்பருக்கு பண அன்பளிப்பு வழங்கி வைக்கப்பட்டதோடு அவர் தபால் நிலையத்திற்கு ஆற்றிய சேவைகள் தொடர்பிலும் நன்றி தெரிவிக்கப்பட்டது.
 
காத்தான்குடி தபால் நிலைய அதிபர் மஸாஹிர் காரியப்பர் சம்மாந்துறை பிரதேச தபால் நிலைய அதிபராக இடமாற்றம் பெற்றுச் செல்வதால் காத்தான்குடி தபால் நிலைய அதிபர் வெற்றிடத்திற்கு மட்டக்களப்பு பிரதம தபாலகத்தில் கடமையாற்றும் தபால் அதிபர் ஏ.சகாயநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். இரு தபால் அதிபர்களும் எதிர்வரும் மார்ச் மாதம் இரண்டாம் திகதி தமது கடமைகளை தத்தமது தபால் நிலையத்தில் பொறுப்பேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here