சிரியா படுகொலையினை கண்டித்து யாழில் கண்டனப் போராட்டம்

0
187

(பாறுக் ஷிஹான்)

சிரியா படுகொலையினை கண்டித்து வடகிழக்கு மாகாணங்களில் மாபெரும் கண்டனப் போராட்டம் நடைபெறவுள்ளது.

“இனப்படுகொலைக்கு எதிரான தமிழ் மக்கள்” என்ற அமைப்பின் ஏற்பாட்டில் எதிர்வரும் முதலாம் திகதி காலை 10 மணியளவில் யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்திலும் மாலை 4 மணியளவில் திருகோணமலை சிவன் கோவிலடியிலும் நடைபெறவுள்ளது.

இந்த கண்டனப் போராட்டத்தில் தமிழ் மக்கள் அனைவரையும் இனப்படுகொலைக்கு எதிராக குரல்கொடுக்க ஒன்று திரளுமாறு அந்த அமைப்பினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கடந்த இரு தினங்களாக சிரியா நாட்டில் பச்சிளம் குழந்தைகள் மற்றும் பெண்கள் படுகொலை கொலை செய்யப்பட்டனர். இந்த இனப்படுகொலைக்கு எதிராகவும் ஐ.நா. மௌனமாக இருப்பதையும் கண்டித்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here