திஹாரி NFGG உறுப்பினர்களின் செலவில் பாதிக்கப்பட்டோருக்கு கூரை சீட் விநியோகம்!

0
219

நேற்று முன்தினம் (26) திஹாரியில் வீசிய பலத்த காற்றினால் கூரைகள் கழன்றும், உடைந்தும் பாதிக்கப்பட்ட வீடுகளுக்குத் தேவையான கூரை சீட்களை, திஹாரிய NFGG உறுப்பினர்கள் தமது சொந்த செலவில் பெற்றுக்கொடுத்தனர்.

நேற்று முன்தினம் மாலை நேரம் திஹாரியில் வீசிய பலத்த காற்றினால் பல வீடுகளின் கூரைகள் பகுதியளவிலும், முழுமையாகவும் கழன்றும், உடைந்தும் இருந்தன. எனவே, உடனே இவ்வீடுகளுக்கு விரைந்த NFGG யினர் மக்களின் குறைகளைக் கேட்டறிந்தனர்.

பின்னர், மறுநாளே பாதிக்கப்பட்ட அனைத்து வீடுகளுக்கும் தேவையான கூரை சீட்களை தமது கட்சி அங்கத்தவர்களிடம் சேர்க்கப்பட்ட பணத்தைக் கொண்டு வாங்கி, உரிய வீடுகளுக்கு வழங்கினர். மொத்தமாக 1 இலட்சடத்து 56 ஆயிரம் ரூபா பெறுமதியான சீட்கள் வழங்கப்பட்டன.

மக்களின் பிரச்சினைகளையும். தேவைகளையும் உரிய நேரத்தில் கண்டறிந்து உடனடியாக நடவடிக்கை எடுத்த NFGG க்கு மக்கள் நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டனர்.

Ashkar Thasleem

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here