அம்பாறை இனவாத தாக்குதல் தொடர்பாக தேசிய ஒருமைப்பாட்டுக்கான முற்போக்கு பேரவையின் ஊடக அறிக்கை

Spread the love

 

அம்பாறை ஜும்ஆ பள்ளிவாயல் மற்றும், முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள் உட்பட வாகனங்களும் இனவாதிகளினால் சேதமாக்கப்பட்டுள்ளமைக்கு எமது கண்டனத்தை தெரிவிக்கின்றோம்.மீளேட்சத்தனமான இச்செயல் கண்டிக்கத்தக்கதும் உடனடியாக நிறுத்தப்படவேண்டியதும் ஒன்றாகும்.

நல்லாட்சி அரசின் வருகைக்கு பின்னரும் இவ்வாறான செயற்பாடுகள் தொடர்வது பாரிய சந்தேகத்தினை தோற்றுவித்துள்ளது. நன்கு திட்டமிடப்பட்டே இவ்வாறான நாசகார வேலைகள் இடம்பெறுவது தேசிய இன ஒற்றுமைக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தியுள்ளது. மாத்திரமன்றி புனித அல்குர்ஆன் எரியூட்டப்பட்டுள்ளது முழு முஸ்லிம்களை சமூகத்தையும் சீண்டிப்பார்க்கும் செயலாகும். இவ்வாறான செயற்பாடுகளை கட்டுப்படுத்த இந்த நல்லாட்சி அரசாங்கம் நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளது.

ஒவ்வொரு சம்பவத்தின் பின்னரும் இனவாதிகள் தப்பித்துக் கொள்கின்றனர் காரணம் சூத்திரதாரிகள் அடையாளங் காணப்படாமையும் முறையான சட்ட நடவடிக்கையின்மையே ஆகும்.

சிறுபான்மை மக்களையும் அவர்களது உரிமைகளையும் உடமைகளையும் பாதுகாக்க வேண்டியது அரசாங்கத்தின் தார்மீகப் பொறுப்பாகும் அதிலிருந்து அரசாங்கம் தப்பிக்க முடியாது. இவ்வாறான செயற்பாடுகள் அரசியலமைப்பை மீறுகின்ற செயற்பாடுகள். நாட்டில் சட்டம் ஒழுங்குகள் யாராலும் மீறப்பட அனுமதிக்க முடியாது.

இலங்கை முன்னெடுத்துவரும் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு இச்சம்பவங்கள் பாரிய அனர்த்தமாக அமையும். ஏதிர்காலத்தில் இவ்வாறான செயற்பாடுகளுக்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் இலங்கை பதில் கூறவேண்டிய நிலைவரும்.

நாடு முழுவதும் இனக்கலவரம் உருவாகும் பின்னணிகள் இச்சம்பவங்கள் மூலம் வெளிப்பட்டுள்ளது.

எனவே, உடனடியாக இவ்வாறான செயற்பாடுகள் எதிர்காலத்தில் நிகழாவிருக்க அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதை உறுதிப்படுத்த வேண்டும். சர்வமத போதகர்கள் மதஸ்தலங்கள் தாக்கப்படுவதற்கு எதிரான பிரச்சாரங்களை மேற்கொள்ள வேண்டும் என்று பணிவுடன் வேண்டிக்கொள்கிறோம். அத்துடன் பாதிக்கப்பட்ட மதஸ்தலங்கள் மற்றும் மக்களுக்கான நஷ்டஈட்னை அரசாங்கம் வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

ஆர். மபூஸ் அஹமட்

இயக்குனர்

கொள்கை பரப்புச் செயலாளர்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*