மஸ்ஜிதுகளின் நிருவாக முறைமையும் புதிய சீர்திருத்தங்களும்

0
384

“சுஜூத்” என்ற வினை அடியில் இருந்து உருவானதுதான் “மஸ்ஜித்” என்ற அரபுப் பதம் . இதன் பொருள் அல்லாஹ்வினை சிரம் பணியும் இடம் ஆகும். இதனை நாம் பள்ளிவாசல் என்று அழைக்கின்றோம்.

பள்ளிவாசல்கள் இஸ்லாமிய வரலாறு நெடுகிலும் ஆட்சியாளர்களின் வாசஸ்தலமாக நீதிமன்றங்களாக, மற்றும் கல்விக் கூடம் போன்ற சேவைகளின் மூலம் முஸ்லிம் உலகின் கலங்கரை விளக்காகத் திகழ்ந்தன.

பிற்பட்ட காலங்களில் இஸ்லாமிய சாம்ராச்சியத்தின் விரிவு காரணமாக பள்ளிவாசல்களை தனியான நிருவாக பிரிவுக்குள் உட்படுத்தி பல சேவைகளை பள்ளிவாசல் மூலமாக முன்னெடுக்கப்பட்டன.

இஸ்லாமிய அல்லது அரபு நாடுகளில் “வக்பு” அல்லது “அவ்ஃகாப்” அமைச்சு மூலம் அதற்கான சட்டங்களை ஏற்படுத்தி பள்ளிவாசல்களின் சேவைகளை மக்களுக்கு அந்நாடுகளின் ஆட்சியாளர்கள் பரந்த அடிப்படையில் பெற்றுக் கொடுக்கின்றனர்.

முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழும் இலங்கை, மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் முஸ்லிம்களுக்கு பள்ளிவாசல்களின் பங்களிப்புக்களை அந்நாடுகளின் வாழும் முஸ்லிம் தலைவர்கள் சட்டரீதியாக பெற்றுக் கொடுத்து இஸ்லாமிய நாடுகளைப் போன்று சிறப்பு சலுகைகைகள் இல்லாவிட்டாலும் குறிப்பிட்ட சட்டதிட்டங்களை வரையறுத்து பொது ஒழுங்கின் கீழ் பயணிக்க சந்தர்ப்பங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.

எமது நாட்டில் முஸ்லிம் கலாசார அமைச்சு மற்றும் “வக்பு” சபை பள்ளிவாசல்களுக்கான சில சர்துக்களையும் மற்றும் சட்டதிட்டங்களையும் வரையறை செய்து கொடுத்துள்ளது. இருப்பினும் பள்ளிவாசல்கள் அமையபெற்ற கிராமங்களின் தேவை கருதி பொது அம்சங்களை உள்ளடக்கி தமக்குள் சில வரையறைகளை ஏற்படுத்திக் கொள்ள பள்ளி “ஜமாஅ த்தி”னருக்கு திறந்த அங்கீகாரத்தினை கொடுத்துள்ளது.

இந்த வகையில் இலங்கையில் பள்ளிவாசல்களை நிருவகிப்பதற்காக குடிமுறைத் தெரிவு, ரெஸ்டி முறை, மற்றும் பொதுத் தெரிவு, போன்ற பல நிருவாக முறைகளைக் காணலாம்.

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் உள்ள பெரும்பாலான பள்ளிவாசல்களில் குடி முறை மூலமான மரைக்காயர் நிருவாக அமைப்பே காணப்பட்டது .

இந்நிருவாக அமைப்பில் குறைகளைக் கண்ட சில கிராமத்தின் “ஜமாஅத்தினர்” அவர்களின் ஆலிம்கள் இமற்றும் கல்விமான்கள் மூலமாக பொதுத் தன்மையினைப் பேணி இஸ்லாமிய வரையறைகளுடன் ஏற்கனவே விடயங்களையும் உள்வாங்கி யாப்புகளை உருவாக்கி சிறப்பாக முன்னெடுப்பதை அவதானிக்கலாம்

சம்மாந்துறை மற்றும் காத்தான்குடி போன்ற கிராமங்களின் பள்ளிவாசல்களின் யாப்புக்கள் சிறந்த எடுத்துக்காட்டுகளாகவும் புதிய நிருவாக முறைமையினை நடைமுறைப்படுத்திய முன்னோடி கிராமங்களாவும் அடையாளப்படுத்தலாம்

தொடரும்

எம். எல். பைசால் காஷிபி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here