விளையாட்டு கழகங்களுக்கு சீருடை வழங்கும் நிகழ்வு

0
234

(றிசாத் ஏ காதர்)

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அட்டாளைச்சேனை மத்திய குழுவினால் விளையாட்டு கழங்களுக்கான சீருடை வழங்கும் நிகழ்வு அதன் மக்கள் பணிமனையில் 2018.03.03ஆம் திகதி இடம்பெற்றது.

முதற்கட்டமாக அட்டாளைச்சேனை பிளக் நைட் விளையாட்டுக்கழக்த்துக்கான சீருடை வழங்கும் நிகழ்வில் கழகத்தின் தலைவர் ஏ.எம்.அக்பர் மத்திய குழுவின் தலைவர் அஸ்வர் ஷாலியிடமிருந்து கழகத்துக்கான சீருடையினை பெற்றுக்கொண்டார்.

இந்நிகழ்வில் மத்தியகுழுவின் செயலாளர் எம்.ஏ.பௌஸ், ஐ.சியாத் மற்றும் சட்டத்தரணி எஸ்.எம்.பைறூஸ் உட்பட பட்டியல் வேட்பாளராகவிருந்த எச்.எம்.இல்முதீன் ஆகியோருடன் மத்திய குழுவின் உறுப்பினர்கள், விளையாட்டுக்கழகத்தின் அங்கத்தவர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here