வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ.ரவீந்திரன் இடமாற்றம்

0
243

(பாறுக் ஷிஹான்)

வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ.ரவீந்திரன் எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அமைச்சர் மனோகணேனின் தேசிய நல்லிணக்க அரச கரும மொழிகள்இ தேசிய கலந்துரையாடல் சகவாழ்வு அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் வடக்கு மாகாணத்தில் நீண்ட காலமாக கல்வி அமைச்சுஇ சுகாதார அமைச்சு உள்ளிட்ட பல அமைச்சுக்களின் செயலாளராக 25 ஆண்டுகளாக வடக்குஇ கிழக்கு மாகாணங்களில் பணியாற்றினர். தற்போது வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் வடக்கு மாகாண முதலமைச்சர் இவரை மாகாணத்திற்கு வெளியே பணிக்கு அமர்த்த வேண்டும் என்று கடந்த 6 மாத காலமாக தொடச்சியாக அழுத்தம் கொடுத்துவந்த நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் வரை காலஅவகாசம் கோரியிருந்தார்.

டிசம்பர் மாதம் தேர்தல் அறிவிப்பு காரணமாக இடமாற்ற உத்தரவுகள் ஒத்திவைக்கப்பட்டது. தற்போது தேர்தல் முடிவுற்ற நிலையில் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் அமைச்சர் மனேகணேசனின் அமைச்சுக்கு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். என அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here