அம்பாறைச் சம்பவத்தின் பின்னணியில் அம் மாவட்டத்தின் கபிணட் அமைச்சரின் அடியாற்களே இருந்தாா்கள்.

0
175

அம்பாறைச் சம்பவத்தில் பின்னணியில் அம்பாறை மாவாட்டத்தின் கபிணட் அமைச்சரின் அடியாற்களே அச் சம்பவத்தின் பின்னணியில் இருந்தாா்கள் . அரசாங்கம் அதனைக் கட்டுப்படுத்த தவறிவிட்டது. அவா்கள் அந்த கபிணட் அமைச்சரின் அரசியற் பலத்தினைப் பாவித்து வேண்டுமென்றே முஸ்லீம்கள் மீது பிரச்சினைகளை மேற்கொண்டனா். அதேபோன்றுதான் திகன நகரில் சிங்கள இனத்தினைச் சாா்ந்த சாரதியொறுவரை தாக்கிய 3 முஸ்லிம் காடையா்களை கைது செய்தும் அதில் முக்கியமான நபரை கைது செய்யவில்லை. அவரை உடன் பினையில் விடுவித்தனா் . அத்துடன் இறந்தவரின் உடல் அடக்கம் செய்யும் தினத்தில் இவ்வாறான குழுப்பங்கள் பிரச்சினைகள் நடைபெறும் என்று தெரிந்திருந்தும் திகன நகருக்கு எவ்வித பாதுகாப்பினையும் வழங்க அரசாங்கமும் பொலிசாரும் எடுக்கத் தவறிவிட்டது. இதனாலே இக் கலவரம் முழு நாட்டிலும் வியாபித்துள்ளது. இக் கலகக் காரா்கள் வேறு பிரதேசங்களிலிருந்து பஸ்களில் வந்து முஸ்லீம்களது கடைகளையும், உடைமைகளையும் சேதப்படுத்தியுள்ளாா்கள். அங்கு ஒரே ஒரு விசேட அதிரடிப் படை வாகனம் மட்டுமே கடமையில் ஈடுபட்டிருந்தது.

இச் சம்பவம் முழுவதையும் பிரதமா் இக் கால கட்டத்தில் சட்டம் ஒழுங்கு அமைச்சராக இருந்தும் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கமே இச் சம்பவங்களினது முழுப் பொறுப்பையும் ஏற்றுக் கொள்ளல் வேண்டும். இதனை முஸ்லீம் மக்கள் புரிந்து கொள்ளல் வேண்டும். வேண்டுமென்றே திட்டமிட்டு கலவரங்கள் நடைபெற்றுள்ளன. . இந்தச் சம்பவங்களுக்கு முழுப் பொறுப்பையும் பிரதமா் ரணில் விக்கிரமசிங்கவின் அரசே பொறுப்புக் கூறல் வேண்டும். இந்த நல்லாட்சி அரசினை உறுவாக்க உதவிய முஸ்லீம்கள் இனியாவது  ஐ.தே.கட்சித் தலைமையை நன்கு புரிந்து கொள்ளல் வேண்டும்.

உலகில் என்றுமில்லதாவாறு அவசர அவசரமாக காணமற் போனோா் சட்டம் நேற்று(7) பாராளுமன்றத்தில் சமா்ப்பிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டிருந்தது. இந்த நாட்டிற்கு இவ்வாறானதொரு சட்டமொன்று தற்போதைய காலகட்டத்தில் தேவையில்லை. அச் சட்டம் சம்பந்தமாக தனியானதொரு நாள் விவாதத்திற்கு தருவதாகவும் சில திருத்தங்கள் செய்வதாகவும் சபாநாயகா் கூட்டு எதிா்கட்சியினருக்கு ஏற்கனவே அறிவித்திருந்தாா்.

ஆனால் இதனை ஜனாதிபதிக்கும் பேப்பா்களை மூடி, பிரதமா் மற்றும் வெளிநாட்டு அமைச்சா் அவசர அவசரமாக இச் சட்டமூலத்தினை பற்றிய அறிக்கைகளை பாராளுமன்ற உறுப்பிணா்களுக்கு சமா்ப்பிக்காது, அச் சட்டத்தினை அனுமதித்திருந்துள்ளாா்கள். உலகில் உள்ள 53 நாடுகள் மட்டுமே இச்சட்டத்திற்கு ஒப்பந்தம் கைச்சாத்திருந்தும் இதுவரை 20க்கு மேற்பட்ட நாடுகள் இதனை அமுல்படுத்தவில்லை. எனவும் பாராளுமன்ற உறுப்பிணா் ஜயந்த சமரவீர நல்லாட்சி அரசினை குற்றம் சுமத்தினாா்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here