கண்டி மாவட்டத்தில் வன்முறையினால் பாதிக்கப்பட்டவர்களில் இருவர் மாத்திரமே பொலிஸில் முறைப்பாடு

0
217

(இக்பால் அலி)

கண்டி மாவட்டத்தில் திகன மற்றும் ஏனைய பிரதேசங்களில் இன வன்முறையினால் பாதிக்கப்பட்டவர்களில் இருவர் மாத்திரமே பொலிஸில் முறைப்பாடு தெரிவித்துள்ளார்கள்.

பாதிக்கப்பட்ட மக்கள் பொலிஸ் நிலையத்திற்கு சமூகம்கண்டி மாவட்டத்திற்கென இனவன்முறை தொடர்பாக விசேடமாக நியமிக்கப்பட்டுள்ள பிரதிப் பொலிஸ் அதிபர் ரணவீர தெரிவித்துள்ளதாக என்று முஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் தெரிவித்தார்.

இது தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையில்

கண்டி மாவட்டத்தில் திகன, அம்பத்தென்ன, கட்டுகஸ்தோட்டை போன்ற பிரதேசங்களில் இனவன்முறைகளால் ஏற்பட்ட இழப்பு ஏனைய பகுதிகளில் நடைபெற்ற இழப்புக்களை விட மிகவும் பன்மடங்காகும். இது ஈடுசெய்ய முடியாத பாரிய இழப்பாகுமம். எனினும் இந்த நஷ்டயீட்டை அரசாங்கத்திடமிருந்து பெற்றுக் கொள்வதாயின் பொலிஸில் முறைப்பாடு செய்தல் அவசியமாகும்.

எனவே முழு இழப்பீட்டு சொத்து விபரங்களையும் பொலிஸில் முறைப்பாட்டில் பதிவு செய்ய வேண்டும். வீடு எரிப்பு, வீட்டிலுள்ள தளபாடங்கள், வீட்டிலுள்ள பொருட்கள், எரியூட்டப்பட்ட வாகனங்கள், சொத்துக்கள், பணம், நகைகள், வர்த்தக நிலையங்கள், பொதுவாக ஒவ்வொரு பொருட்களின் விலை மதிப்பீட்டை பதிவு செய்தல் அவசியமாகும். துரிதமாக இந்த பதிவுகளை மேற்கொள்ளுமாறு பிரதி பொலிஸ் அதிபர் வேண்டுகோள் விடுப்பதாக அமைச்சர் ஹலீம் தெரிவித்தார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here