வன்முறைகளைக் கண்டித்து வர்த்தக நிலையங்களை மூடி மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பு!

0
213

(அபூ இன்ஷிபா)

நாட்டின் முஸ்லிம் பிரதேசங்களில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலையை கருத்திற்கொண்டு நேற்று 09.03.2018 நாடு பூராவும் முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டு தமது அமைதியான எதிர்ப்பினை வெளிப்படுத்துகின்ற இச்சந்தர்ப்பத்தில் வாழைச்சேனை, ஓட்டமாவடி பிரதேசங்களிலும் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

சிலர் வெள்ளிக்கிழமைகளில் மூடுவதினால் எந்தப்பலனும் இல்லையென்று பேசினாலும் அத்திவாசியமான பொருட்களை பெற்றுக்கொள்ளக்கூடிய மரக்கறிக்கடைகள், இறைச்சிக்கடைகள், சில்லறைக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டதுடன் வெள்ளிக்கிழமைகளில் ஜூம்ஆத் தொழுகைக்கும் செல்லமால் வியாபாரங்களை மேற்கொள்கின்ற உணவகங்களும் மூடப்பட்டு (எல்லா உணவகங்களும் அப்படி இல்லை) தனது தியாகத்தினை வெளிப்படுத்திருக்கிறார்கள்.

இவ்வாறு 90 வீதமான கடைகள் அதேபோன்று எரிபொருள் நிரப்பும் நிலையம் , ஒரு சில வங்கிகள் மூடப்பட்டிருந்தாலும் ஒருசிலர் ஒற்றைப்பலகைகளில் திறந்து தாராளமாக வியாபாரமும் செய்திருந்தமையும் சுட்டிக்காட்டத்தக்கது.  

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here