பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீட்டினை பெற்றுக்கொடுக்க ஹிஸ்புல்லாஹ் முயற்சி

Spread the love

கண்டி மாவட்டத்தில் திகன, தெல்தெனிய, மெனிக்கின்ன உள்ளிட்ட பிரதேசங்களில் முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனவாத தாக்குதல் காரணமாக சொத்துக்களை இழந்த மக்களுக்கு அரசிடமிருந்து நட்டஈட்டினைப் பெற்றுக்கொடுப்பதற்கான முயற்சிகளை புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் ஆரம்பித்துள்ளார்.

இனவாத தாக்குதல்களினால் பாதிக்கப்பட்ட திகன பிரதேசத்திற்கு நேற்று வெள்ளிக்கிழமை மாலை விஜயம் செய்த இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ், திகன, கும்புக்கந்துர ஜும்ஆ பள்ளிவாசலில் விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு சட்டரீதியிலான ஆலோசனைகள் – நடவடிக்கைளை வழங்க கண்டி முஸ்லிம் சட்டத்தரணிகள் சங்கம் முன்வந்துள்ளது. இதன்போது, அதனிடம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நட்டஈட்டினைப் பெற்றுக்கொடுப்பதற்கான முயற்சிகளை தான் முன்னெடுப்பதாக உறுதியளித்துடன் அதற்குத் தேவையான உத்தியோகபூர்வ சட்ட ஆவணங்கள், அறிக்கைகள் மற்றும் புகைப்படங்களை தயாரிக்குமாறு இராஜாங்க அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

எனினும், பொலிஸ் முறைப்பாடு, இழப்பீட்டு அறிக்கை தயாரிப்பதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களை இராஜாங்க அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு வந்ததை அடுத்து, கண்டி மாவட்டத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் புனர்வாழ்வு அதிகார சபையின் ( REPPIA ) பணிப்பாளர் ஆகியோரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பொலிஸ் முறைப்பாட்டினை இலகுவாக மேற்கொள்வதற்கு மக்கள் இடம்பெயர்ந்துள்ள பகுதிகளுக்கு முறைப்பாடு பதிவு செய்வதற்கென மக்கள் தொடர்பாடல் சேவையொன்றினை நடத்துமாறும், இழப்புக்கள் சம்பந்தமான அறிக்கை தயாரிப்பதற்கு .புனர்வாழ்வு அதிகார சபையின்அ( REPPIA )திகாரிகளை பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பி வைக்குமாறும் பணிப்புரை வழங்கினார்.

அதற்கமைய, பாதிக்கப்பட்ட மக்கள் இடம்பெயர்ந்துள்ள பகுதிகளுக்கு பொலிஸ் குழுக்களை அனுப்பி முறைப்பாடுகளை பதிவு செய்ய உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக கண்டி மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் உறுதியளித்துள்ளார். அத்துடன், இழப்புக்கள் சம்பந்தமாக ஆராய எதிர்வரும் திங்கட்கிழமை கொழும்பிலிருந்து அதிகாரிகள் அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் அவர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான ஆலோசனைகள், விண்ணப்பங்களை வழங்கவுள்ளதாகவும் புனர்வாழ்வு அதிகார சபையின் ( REPPIA ) பணிப்பாளர் தெரிவித்தார்.

இதேவேளை, அளுத்கம மக்களுக்கு நட்டஈட்டினைனப் பெற்றுக்கொடுத்தது போன்று தனது அமைச்சின் ஊடாக திகன கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் வெகுவிரைவில் நட்டஈட்டினைப் பெற்றுக்கொடுக்க முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் உறுதியளித்தார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*