டெங்கற்ற சூழலை மாணவர்கள் மத்தியில் உருவாக்க விசேட செயல்திட்டம்.

0
235

(ஓட்டமாவடி எச்.எம்.எம். பர்ஸான்)    

டெங்கு நோயினை இல்லாதொழித்து டெங்கற்ற சூழலை உருவாக்க மாணவர்கள் மத்தியில் விசேட செயல்திட்டம் ஒன்றினை கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் மேற்கொண்டு வருகிறது.

அந்தவகையில் பாடசாலை மாணவர்களுக்கு மத்தியில் டெங்கு நோயின் தாக்கங்கள் பற்றியும் அதானால் ஏற்படும் விபரீதங்கள் பற்றியும் தெளிவுபடுத்தி பாடசாலைக்கும் பாடசாலைகளுக்கு வெளியிலும் டெங்கு நோய் பரவும் பொருட்களைக் கண்டால் நாம் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் அதனை எவ்வகையில் கையால வேண்டும் என்று பல்வேறுபட்ட அறிவுறுத்தல்களை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக அதிகாரிகள் வழங்கி வருகின்றார்கள்.

அதன் தொடரில் (9) ம் திகதி வெள்ளிக்கிழமை வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலயத்திலும் குறித்த விழிப்பூட்டல் நிகழ்வுகள் நடைபெற்றதோடு மாணவிகள் வீடுகளில் இருந்து கொண்டுவரப்பட்ட டெங்கு நோய் பரவக்கூடிய பொருட்களுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பாடசாலையின் முதல்வர் அல்ஹாஜ் எம்.ரீ.எம்.பரீட், பொதுச் சுகாதார பரிசோதகர் அல்ஹாஜ் எம்.ஏ. நெளசாத் மற்றும் பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள் எனப்பலரும் கலந்துகொண்டு மாணவிகளுக்கு பரிசில்களை வழங்கிவைத்தமை குறிப்பிடத்தக்கது.                       

   

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here