இன,மத,கட்சி வேறுபாடின்றி இஷாக் ரஹுமான் MP நீர்த்தாங்கிகள் வழங்கி வைப்பு.

0
106

(அஸீம் கிலாப்தீன்)

அனுராதபுர நலன்புரிச்சங்களுக்கு அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் தனது சொந்த நிதியிலிருந்து குடி நீர் தாங்கிகளை வழங்கி வைக்கும் நிகழ்வு கலாவெவயில் உள்ள அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் இம்முறை பலாகல, கல்னேவ, கெக்கிராவ, இப்பலோகம ஆகிய பிரதேச சபைகளில் ஐக்கிய தேசிய கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றியீட்டிய உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தனர்.

இன, மத, கட்சி வேறுபாடின்றி நாம் அனைவரும் இலங்கையர்கள் என்ற ஓர் எண்ணப்பாட்டுடன் ஒன்றிணைந்து நம் நாட்டை கட்டியெழுப்ப வேண்டும் என்றும் தனது இச்சேவையானது கட்சி வேறுபாடின்றி தான் செய்வதாகவும், தன்னால் முடியுமான சகல உதவிகளையும் இறுதிவரை இச்சமூகத்திற்காய் செய்வேன் என  இந்நிகழ்வில்  பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் தெரிவித்தார்கள்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here