ஓட்டமாவடி தே.பா யின் பஸ் கொள்வனவுத்திட்டத்திக்கு கண்டி நபர் ஒருவரினால் 126,356 ரூபாய் அன்பளிப்பு.

Spread the love

(எம்.ரீ. ஹைதர் அலி)

பஸ் கொள்வனவுத்திட்ட நிதி சேகரிப்புக்கு இலங்கை கண்டியைச் சேர்ந்த பெயர் குறிப்பிட விரும்பாத சகோதரர் ஒருவரின் முயற்சி மூலம் தான் செய்த உதவியை அறிமுகப்படுத்திக் கொள்ள விரும்பாத கட்டாரின் பிரபல நிறுவனமொன்றின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஒருவரிடமிருந்து சுமார் 3000 கட்டார் றியாழ்கள் (126356 இலங்கை ரூபாய்கள்) கிடைக்கப்பெற்றுள்ளன.

இந்த உதவியைப் பெற்றுத்தந்த குறித்த சகோதரருக்கும் குறித்த பிரபல நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரிக்கும் ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் பழைய மாணவர் சங்க கட்டார் கிளையின் சார்பாகவும் பாடசாலை சமூகம் சார்பாகவும் மனப்பூர்வமான நன்றிகளையும் பிரார்த்தனைகளையும் செய்து கொள்கிறோம்.

கிடைக்கப்பெற்ற குறித்த நிதிப்பங்களிப்புடன் இதுவரை பஸ் கொள்வனவுத்திட்ட கணக்கில் மீதி இருப்பாக 2,068, 842.73 இலங்கை ரூபாய்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலதிகமாகத் தேவைப்படும் மீதித்தொகையை சேகரித்துக்கொள்ள நாம் பல்வேறு திட்டங்ககளை முன்னெடுத்து அயராதுழைத்து வருகின்றோம்.

ஆகவே, இத்திட்டத்தை கொண்டு நிறைவு செய்து கொள்ள அண்மையில் எம்மால் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட கலந்துரையாடலில் கலந்து கொண்டு கையேடுகளைப் பெற்றுக்கொண்ட சகோதரர்கள் தங்களது முயற்சிகளை தொடருமாறு இந்த சந்தர்ப்பத்தில் அன்பாய்க் கேட்டுக்கொள்கிறேன்.

குறிப்பாக, எமது பிரதேச சகோதரர்களின் ஒத்துழைப்பு அவசியமானதாகவுள்ளதால், முடிந்தளவு எமது திட்டத்திற்கு உதவ முன்வருமாறும் நாம் முன்னெடுக்கும் திட்டங்களுக்கு பூரண ஒத்துழைப்பு தந்து குறித்த காலப்பகுதியினுள் இதனை நிறைவு செய்ய உதவுமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*