அட்டாளைச்சேனையில் நாளை செவ்வாய் ”போசணை விழிப்புணர்வு கருத்தரங்கு”

0
259

(பைஷல் இஸ்மாயில்)

சுதேச மருத்துவ அமைச்சினால் தேசிய ரீதியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற ”போசணை விழிப்புணர்வு கருத்தரங்கு” ஒன்றினை அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையில் நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ரீ.ஜே.அதிசராஜ் இன்று (12) தெரிவித்தார்.

அவர் இதுதொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

“போசாக்கு மற்றும் தொற்றா நோய்” என்ற தொனிப் பொருளில் முதியவர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கினை நாளை காலை 9.00 மணி தொடர்க்கம் 11.00 மணிவரை இக்கருத்தரங்கு இடம்பெறவுள்ளதாகவும், இதில் அட்டாளைச்சேனை பிரதேசத்திலுள்ள ஆண், பெண் இருபாலாரும் கலந்துகொண்டு பயன்பெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் கே.எம்.அஸ்லம், வைத்தியர்களான ஐ.எல்.அப்துல் ஹை, பர்வீன் முகைடீன், எஸ்.எம்.றிசாத், எல்.பஸ்மினா, எம்.எஸ்.சிஹானா, ஏ.ஆர்.எப்.ஆசிக்கா, எம்.ரீ.அமிறா உள்ளிட்ட வைத்தியர்களின் பங்கு பற்றுதலுடன் விஷேட வைத்திய சேவையும் இதில் இடம்பெறவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here