வன்முறையாளர்களை CCTV காணொளி மூலம் கைது செய்ய பொலிசார் நடவடிக்கை

Spread the love

(இக்பால் அலி)

கண்டியில் இடம்பெற்ற வன்முறைகளுடன் சம்பவந்தப்பட்டவர்களுடைய அடையாளங்களை சி. சி. டி. வி. காணொளியின் மூலம் பெற்றுக் கொள்ளும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

தாக்குதல் மற்றும் எரிவூட்டுதல் மூலம் பள்ளிவாசல்கள், வர்த்தக நிலையங்கள் மற்றும் வாகனங்கள் போன்ற 465 அளவிலான வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இவை தொடர்பாக தகவல்களை சி. சி. டி. வி காணொயின் மூலம் பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகளில் தற்போது ஈடுபட்டு வருதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வியாபார நிலையங்கள் மற்றும் வீடுகளைச் சேதம் விளைவித்த பின்னர் அங்கு இருந்த பொருட்களை கொள்ளையடித்த சம்பவம் தொடர்பாக கிடைத்த தகவலை அடுத்து இந்த பொலிஸ் விசாரணைகள் மேற்கொண்டுள்ளனர்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*